'மூன்றாவது அலை தொடர்பான சமூக ஊடக தகவல்களை நம்ப வேண்டாம்'

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: ''மூன்றாவது அலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம்'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில், தடுப்பூசி முகாம், நேற்று துவங்கியது. இதை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள்,

சென்னை: ''மூன்றாவது அலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம்'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news



சென்னை, சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில், தடுப்பூசி முகாம், நேற்று துவங்கியது. இதை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள், கர்ப்பிணியர் என, அனைவருக்கும் தடுப்பூசி போட, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக, ஆன்மிகம், சுற்றுலா தலங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தடுப்பூசி போடப்படும்.

திருவண்ணாமலை, ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ள பகுதியில், தடுப்பூசி போட, அங்குள்ள மாவட்ட கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசு, தமிழகத்திற்கு 1.80 கோடி தடுப்பூசிகள் வழங்கி உள்ளது. இதில், 4.76 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இரண்டு நாட்களுக்கு முன், 30 லட்சம் தடுப்பூசி வந்ததாகவும், அதை பயன்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன், 3 லட்சம் தடுப்பூசிகள் தான் வந்தன. ஜூன் மாதம், ஐந்து லட்சம் தடுப்பூசிகளை வீணடித்ததாக, பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு, கூறியதில் உண்மை இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில், மூன்று லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.


latest tamil news



மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கிய முறையான பயிற்சியில், இரண்டு மாதத்தில், ஏழு லட்சம் தடுப்பூசிகள் சேமிக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், கரியாம்பட்டி கிராம குழந்தைகள் காப்பகத்தில், கொரோனா பாதித்த, 43 குழந்தைகளுக்கு, டெல்டா பிளஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், இல்லை என முடிவுகள் வந்தன.

கொரோனா, 3வது அலையை கையாள, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதால், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. மூன்றாவது அலை தொடர்பாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202105:13:39 IST Report Abuse
ராஜா ஆமா மூன்றாவது அலை வந்ததுக்கு அப்புறம் ஸ்டாலின் தான் அறிவிப்பார். சமூக வலைதளங்களில் இன்னும் பாஜகவுக்கு எதிராக உபிஸ் பொய்த்தகவல்கள் பரப்பிக்கொண்டு இருப்பதால் அதை நம்ப வேண்டாம் என்கிறார் போலும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:36:01 IST Report Abuse
meenakshisundaram ஆமாம் பொது மக்களே .அதுக்கு பதிலா எங்கள் அறிக்கையே நம்புங்கள் அதுவே ஒரிஜினல் நம்பர் ஒன்னு.-நீட் தேர்வு கிடையவே கிடையாது ?
Rate this:
Cancel
19-ஜூலை-202118:00:09 IST Report Abuse
அப்புசாமி போனவாரம் 15 லட்சம் தடுப்பூசி வந்ததாகவும் சுகாதாரத்துறை செயலாளர் படத்துடன் செய்தி வந்ததே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X