அரசு கட்டுபாட்டில் கோவில்கள் விடுவிக்க வலியுறுத்தல்

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (43) | |
Advertisement
புதுடில்லி-அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம்,

புதுடில்லி-அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.latest tamil news


ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்.


latest tamil newsஎனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
19-ஜூலை-202116:42:47 IST Report Abuse
Rajas மற்ற மாநிலங்கள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் நாட்டை பொறுத்த வரை இந்து சமய சட்டம் முதலில் 1925 ல் கொண்டு வரப்பட்டு பின்னர் 1951 ம் வருடம் சட்டமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அதில் இருந்த குறைகள் சரி செய்து முழுமையாக 1959 கொண்டு வரப்பட்டது 1954 ல் உச்ச நீதிமன்றம் அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் சரி என்று சொல்லி விட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை தனி நபர்களிடம் கொடுக்கும் படி ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவே முடியாது.
Rate this:
Cancel
D.Swaminathan - Velechery,இந்தியா
19-ஜூலை-202116:20:35 IST Report Abuse
D.Swaminathan Now it is emergency to handover all temple to concerned to maintain all the rituals according to the Agama, Dravida government did the following in all hindu temple such as extract more money from the poor people for darshan, Looting of temple properties, Stolen of valuable idols, poor maintenance of temple, no social welfare etc.Now the temple under Aadheenam, mutts are good maintenance, all the rituals are doing as per Agma etc.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
19-ஜூலை-202116:05:43 IST Report Abuse
Rajas தமிழகத்தில் புராதன காலத்திலிருந்தே கோவில்கள் மீது அரசுக்கு கட்டுப்பாடு உண்டு. ஏனென்றால் பெரும்பாலான கோவில்களை உருவாக்கியது அரசுகள் தான் (மன்னராக இருந்தாலும்). ஆனால் வட இந்தியாவில் ஓயாத போரினால் அங்கே அரசர்கள் கோவில்களை மடங்களின் நிர்வாகத்திற்கு கொண்டு சென்றனர். இப்போது வட நாட்டில் இருப்பதைபோல மடாதிபதிகள் வசம் கோவில்களை கொண்டுசெல்ல முயல்கிறார்கள். வட இந்தியாவில் பிரமாண்ட கோயில்கள் குறைவு. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான பிரமாண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகளும் இருக்கின்றன. இவற்றை கையாள்வதற்குதான் இந்து சமய அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது. வட இந்தியாவில் உள்ள மந்திர் என்று சொல்லப்படும் கோயில்கள் இன்றளவும் தனியார் நிர்வாகத்திடம்தான் உள்ளன. ஆந்திராவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இன்னும் பல வட மாநிலங்களில் இத்தகைய சட்டமே இல்லை. எனவே, தமிழகக் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் இருப்பது கோவில்களின் வருமானம், சொத்துக்கள், மற்றும் சிலரின் தன்னலம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X