பா.ஜ.,வை தோற்கடிக்க கூட்டணி: உ.பி.,யில் பிரியங்கா ஆவேச பேச்சு

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
லக்னோ : ''உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வை தோற்கடிக்க, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திறந்த மனதுடன் தயாராக உள்ளது,'' என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறினார்.உ.பி., மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், உ.பி., தலைநகர்
Priyanka Gandhi, Congress, UP polls, BJP, Priyanka

லக்னோ : ''உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வை தோற்கடிக்க, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திறந்த மனதுடன் தயாராக உள்ளது,'' என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறினார்.

உ.பி., மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், உ.பி., தலைநகர் லக்னோவுக்கு நேற்று வந்த பிரியங்கா, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.


latest tamil news


பின் நிருபர்களிடம் கூறியதாவது: உ.பி.,யில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இங்கு பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டியது மட்டுமே எங்களின் இலக்கு. இதற்காக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க, திறந்த மனதுடன் தயாராக உள்ளோம். பா.ஜ.,வை எதிர்க்கும் மற்ற கட்சிகளும், இதேபோல் திறந்து மனதுடன் கூட்டணி அமைக்க தயாராக வேண்டும்.

கொரோனா பரவல் காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட கட்சி காங்கிரஸ் தான். தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல பிரச்னைகளை எழுப்பினோம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இம்முறை வலுவான கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது. என்னையும், என் சகோதரர் ராகுலையும் அரசியல் சுற்றுலா பயணியர் என, பா.ஜ., விமர்சிப்பது பற்றி கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202105:10:29 IST Report Abuse
ராஜா அம்மினி, அது நீங்கள் இல்லை, உங்கள் தாத்தாவே வந்தாலும் நடக்காது.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
19-ஜூலை-202114:11:06 IST Report Abuse
Narasimhan உங்க தம்பிய கொஞ்சம் பிரச்சாரம் செய்யாம பாத்துக்குங்க.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஜூலை-202113:13:54 IST Report Abuse
Ramesh Sargam நமது நாட்டின் எதிர் கட்சியினர் பா.ஜ.,வை தோற்கடிப்பதிலேயே முழு கவனமும் செலுத்திவருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்வதிலே அவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை. எதிர் கட்சி என்றால், மக்களுக்கு உதவி செய்திட முடியாதா...? பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும். ஆட்சியை பிடிக்கவேண்டும். கொள்ளை அடிக்கவேண்டும். இதுதான் அவர்களின் சித்தாந்தமாக உள்ளது. கேடுகெட்ட ஜென்மங்கள்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூலை-202113:49:28 IST Report Abuse
Dhurveshநீங்கள் மட்டும் என்ன PETROL DIESEL GAS விளையால் மக்கள் அவதி படும்போது / தடுப்பூசி supply இல்லை இதை பற்றி எல்லாம் கவலை படாமல் எதிர்க்கட்சி தலைவர்கள் phone TAP செய்வது என்று தானே அலைந்து கொண்டு இருக்குறீர்கள் அப்புறம் என்ன புலுகலாம் ஆனா நீ REFEL vilai 55000 கோடி அளவுக்கு புளுக கூடாது...
Rate this:
saruk - ssj,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-202117:11:38 IST Report Abuse
sarukபெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏன் என்று பார்த்தீர்களா , சும்மா போங்க கோட்ட்து , உலகில் எந்த நாட்டிடம் இத்தனை தடுப்பூசி உள்ளது , எதாவது சின்ன பிரச்னையை எடுத்து கொண்டுண்டு பாராளுமன்றம் நடத்தாமல் செய்யணும் அவளவுதான்...
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-ஜூலை-202117:17:30 IST Report Abuse
elakkumananபயங்கரமான அறிவாளியா இருக்காப்லயே.....ஊழல் செஞ்சு எதிர் கட்சி மாட்டினால், இந்த உலகத்திலேயே முதல் முதலில் வழக்கு போடும் கட்சி திமுக.....ஏனென்றால், அந்த ஒரு வழியில் மட்டும்தான், திமுக தன்னை யோக்கியமாக காட்ட முடியும்...ஆனால், அந்த திமுக வே கூட ரபேல் சம்பந்தமா கேசு போடலைனா,...
Rate this:
Hari - Chennai,இந்தியா
19-ஜூலை-202117:35:42 IST Report Abuse
Hari...உனக்கு சொந்த புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஜூலை-202119:07:07 IST Report Abuse
Dhurveshபைலை காணோம் என்று அர்த்தம்...
Rate this:
Rajas - chennai,இந்தியா
19-ஜூலை-202119:33:21 IST Report Abuse
Rajas/////ஆனால், அந்த திமுக வே கூட ரபேல் சம்பந்தமா கேசு போடலைனா,...///// திமுக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டுமே கேஸ் போடும். சரி ரபேல் விவகாரத்தில் எங்கள் மீது கேஸ் போட தயாரா என்று பிஜேபி அமைச்சர்கள் பார்லிமென்டில் திமுக எம்பிக்களிடம் சவால் விட தயாரா. அங்கே வில்சன் மற்றும் பாரதி இருக்கிறார்கள். சவால் விடலாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X