பொது செய்தி

இந்தியா

ஜாமியா பல்கலை வளாகத்தில் டேனிஷ் சித்திக் உடல் நல்லடக்கம்

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 'புலிட்சர்' விருது பெற்ற புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கின் உடல் டில்லி ஜாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தில்மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.ரோஹிங்கியா அகதிகளின்
Danish Siddiqui, Jamia Millia Islamia, graveyard

புதுடில்லி : தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 'புலிட்சர்' விருது பெற்ற புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கின் உடல் டில்லி ஜாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தில்மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.ரோஹிங்கியா அகதிகளின் அவலம் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் இவருக்கு புலிட்சர் விருதை பெற்றுக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையில் நடந்து வரும் சண்டையை புகைப்படங்களாக எடுக்க சென்ற குழுவில் இடம்பிடித்திருந்தார்.


latest tamil news


கடந்த 16ம் தேதி ஆப்கனின் கந்தகர் பகுதியில் தலிபான் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினருடன் இருந்த சித்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று டில்லிக்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலை டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அதன் துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.

டேனிஷ் சித்திக் ஜாமியா பல்கலையின் முன்னாள்மாணவர். இவரின் தந்தை அக்தர் சித்திக் இந்த பல்கலையின் 'டீன்' ஆக பணியாற்றியவர். டேனிஷ்பெற்றோர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உடலை பல்கலை வளாக அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இங்கு பல்கலை ஊழியர்கள் அவர்களின் வாழ்க்கை துணை மற்றும் அவர்களின் மைனர் குழந்தைகளை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
19-ஜூலை-202119:19:34 IST Report Abuse
Sivagiri இவர் ஏன் அங்கு சென்றார் ? இவரை தாலிபான்கள் ஏன் கொன்றார்கள் ? . கொன்ற தாலிபான்களை கண்டனம் தெரிவிக்கவோ , தாலிபான்களுக்கு எதிராக ஒரு வார்த்தையும் தெரிவிக்கவோ இந்தியாவில் ஒரு நாதியும் இல்லையா? இது பற்றி கொஞ்சம் விஜாரித்தல் தேவலை . . .
Rate this:
Cancel
Ramesh Ganesan - Vienna,ஆஸ்திரியா
19-ஜூலை-202116:24:38 IST Report Abuse
Ramesh Ganesan Could have been done in Afgan itself instead of polluting a university soil here
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூலை-202114:24:59 IST Report Abuse
Rafi சர்வாதிகார அரசுகளின் கோர முகத்தை தன்னுடைய புகைப்படத்தின் மூலம் உயிரூட்டிய மகத்தான கலைஞர், அவரின் மறுமை வாழ்க்கை வெற்றி அடைய ஏக இறைவனை வேண்டுகின்றேன், அவர் மறைந்தாலும் நூற்றுக்கணக்கானவர்கள் தொடருவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X