"பாகுபலியாக மாறலாம்" - மோடி

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி போட்டால் அவர்கள் பாகுபலி போல் பலம் பெறலாம் என பிரதமர் மோடி கூறினார்.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பார்லி., வளாகத்தில் நிருபர்களிடம் பேசியதாவது:பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டால்

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி போட்டால் அவர்கள் பாகுபலி போல் பலம் பெறலாம் என பிரதமர் மோடி கூறினார்.



latest tamil news


பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பார்லி., வளாகத்தில் நிருபர்களிடம் பேசியதாவது:
பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டால் பாகுபலியாக மாறலாம். இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு, பாகுபலி போன்று வலிமையாக உள்ளனர். கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் .



latest tamil news


பார்லி.,யில் ஆக்கப்பூர்வ விவாதம் தேவை. விவாதங்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. கோவிட் பாதிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். பார்லி., கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.


latest tamil news



தானே குடை பிடித்தபடி வந்தார்


பிரதமர் மோடி பார்லி.,க்கு வரும் போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவர் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி வந்தார். உதவியாளர்கள் யாரையும் குடை பிடிக்க அனுமதிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
19-ஜூலை-202122:29:00 IST Report Abuse
m.viswanathan நரகாசுரனாக ஒருவர் இங்கு இருக்கும் போது நாங்கள் எங்கிருந்து பாகுபலியாக மாறுவது
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-202121:54:36 IST Report Abuse
thonipuramVijay ஆமாம் உண்மைதான் , அமரேந்திர பாகுபலியாக மாறலாம் ...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜூலை-202120:38:29 IST Report Abuse
J.Isaac நாட்டில் குடை பிடிப்பதெல்லாம் ஒரு முக்கிய நிகழ்வாகிவிட்டது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:23:14 IST Report Abuse
meenakshisundaramஆமாம் ,இங்கே மீனவ துறை அமைச்சரை சின்ன பையனை போல தூக்கிக்கொண்டு போகும் கலாச்சாரம் இருக்கையில் அவுங்களுக்கு இது அர்த்தமுள்ளதாக தெரியாதது ஆச்சரியமே போடுங்க 'ஜால்றா'...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X