ஜனாதிபதி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு; சட்டசபை நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், முதன்முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க டில்லி சென்றார். இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
President, TamilnaduCM, Stalin, Meet, Assembly, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், முதல்வர் ஸ்டாலின், சந்திப்பு, சட்டசபை, நூற்றாண்டு விழா

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், முதன்முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க டில்லி சென்றார். இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின்போது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு உடனிருந்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக சட்டசபை அமைந்து நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன்.


latest tamil news



மேலும் சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவ படம் திறப்பதற்கும், அதேபோல் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி அமைக்கப்படவுள்ள நினைவுத்தூண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருகை தருமாறு கோரிக்கையை முன்வைத்தேன். ஜனாதிபதியும் வருவதாக உறுதியளித்தார். நீட் தேர்வு, மேகதாது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 3வது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
19-ஜூலை-202123:25:14 IST Report Abuse
Sri நாம் குடியரசாகி 71 வயது .எங்கிருந்து பிரிட்டிஷ் ரஷ் அடிமை காலம் ஆகிய 1921 to 2021 கணக்கு வந்தது.?? அப்பொழுது மெட்ராஸ் பிரசிடெசின்ஸி கேரளாவை தவிர மற்ற மூன்று மாநிலங்களூம் சேர்ந்திருந்தனவே பிறகு நாம் குன்றிய மாநிலம் ஆகி 65 வருடங்கள் ஆகிவிட்டது..இந்த 100 ஆண்டு தவறான அழைப்பை ஒன்றிய ஜனாதிபதி எப்படி ஏற்று கொள்கிறார்??..
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-ஜூலை-202123:20:01 IST Report Abuse
Anbuselvan அப்போ நீட் தேர்வு ரத்து?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூலை-202122:10:53 IST Report Abuse
Pugazh V செய்த அத்தனை ஊழல்களும் கொள்ளைகளும் நிரூபணமாகி பதவி பறிக்கப்பட்டு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது தான் அவமானம். இன்று வரை கலைஞர் மீதான.எந்த ஊழல் குற்றச்சாட்டுமே நிரூபிக்க முடியாமல், ஆதாரம் இல்லாமல் சட்டத்தின் முன் பொய்கள் என்று நிரூபணமாகின்றன. ஊழல் திலகம் ஜெயலலிதா வின் படமே இருக்கும் போது, கலைஞர் படம் அதைவிட பெரியதாக வைக்கப்பட வேண்டும். ஊழல் செய்ததால் பதவி பறிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X