புதுடில்லி: பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை பொறுக்க முடியாத எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகின்றன என்று பிரதமர் மோடி சாடினார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியதும் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை பிதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அந்நேரத்தில் எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர். திரிணமுல் காங்., எம்.பி.,க்கள் பார்லி.,க்கு சைக்கிளில் வந்தனர்.
ராஜ்யசபாவில் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் பேசுகையில்;
அரசு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. ஆனால் சில எதிர்கட்சிகள் அரசை குறைகூறுகின்றன. விவாதத்திற்கு செல்ல வேண்டுமே தவிர அமளியில் ஈடுபடக்கூடாது.

புதிய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட , பழங்குடி சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். இந்த அறிமுகத்தை எதிர்கட்சியினரால் பொறுக்க முடியவில்லை . இதனால் இவ்வாறு அமளியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.
இது போல் முதலில் பிரதமர் பங்கேற்ற லோக்சபாவிலும் எதிர்கட்சியினர் கோஷங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைக்ககு இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE