எத்தனை பொய்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுக.,வை வீழ்த்த முடியாது: பழனிசாமி

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
சேலம்: எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுக.,வை வீழ்த்த முடியாது என முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல்
ADMK, Palanisamy, Sasikala, EPS, அதிமுக, பழனிசாமி, சசிகலா, இபிஎஸ்

சேலம்: எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுக.,வை வீழ்த்த முடியாது என முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் திமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஏற்படுத்திய அச்ச உணர்வால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. அப்போது இருந்த மருத்துவத்துறை செயலாளரும், டாக்டர்களும் தற்போது பணியில் உள்ளனர். அவர்களுக்கு முழுமையாக தெரியும்.


latest tamil news


தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. மேட்டூர் உபரி நீர் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் திட்டம் ஒரு சில இடத்தில் நில ஆர்ஜிதம் செய்யாமல் உள்ளது. அவற்றை அரசு விரைவுப்படுத்த வேண்டும்.
சசிகலா இருந்தபோதும் 1996 மற்றும் 2006-ல் ஆட்சியை இழந்து உள்ளோம். அவர்கள் எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார்கள். எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுக.,வை வீழ்த்த முடியாது. மேகதாது அணை கட்டினால் டெல்டா பாசனம் பாலைவனமாக மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:18:08 IST Report Abuse
meenakshisundaram அப்படி மெத்தனமாக இருக்க வேண்டாம் திமுகவே சசி யை உபயோகிக்கும் .மேலும் உட்கட்சி பலவீனம் எதுவும் வர விடாமல் அதிமுகவினர் செயல் புரிவதே மக்களுக்கு நன்மை .எதிர் கட்சியாக இயக்கம் செய்கையில் ஸ்டாலினை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் தரம் கீழாக இறங்காமல் மற்றப்படி முழு அளவில் எல்லாத்தலைவர்களும் திமுகவை விமர்சிக்க வேண்டும். தேர்தலில் இடைப்பாடி,ராஜேந்திர பாலாஜி தவிர பெருமளவில் ஜெயக்குமார் ,செல்லூர் ராஜு அதிமுக பிரச்சாரம் செய்யவில்லையே ?ஏன் ?
Rate this:
Cancel
POORMAN - ERODE,இந்தியா
19-ஜூலை-202123:03:04 IST Report Abuse
POORMAN எத்தனை சசிகலா வந்தாலும் வீழ்த்த முடியாது. பழனிசாமி இருக்கிற வரை அதிமுகாவ வேற ஒருத்தரா வந்து அழிக்க முடியும்.
Rate this:
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
19-ஜூலை-202122:05:05 IST Report Abuse
Mani iyer Vijayakumar தி தி க கடசி இருக்கும் வரை எப்பொழுதும் தமிழ்நாடு உருப்படாதூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X