பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 14,500 பேருக்கு தடுப்பூசி

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 500 பேருக்கு, இன்று தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிஷீல்டு தடுப்பூசி, 14 ஆயிரத்து, 500 ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளதால், மாவட்டத்தில், 138 மையங்களில், ஜூலை, 19ல்(இன்று) தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதில், சேலம் சுகாதார மாவட்டத்துக்கு, 7,000, ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு, 3,290,

சேலம்: சேலம் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 500 பேருக்கு, இன்று தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிஷீல்டு தடுப்பூசி, 14 ஆயிரத்து, 500 ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளதால், மாவட்டத்தில், 138 மையங்களில், ஜூலை, 19ல்(இன்று) தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதில், சேலம் சுகாதார மாவட்டத்துக்கு, 7,000, ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு, 3,290, மாநகராட்சி பகுதிக்கு, 4,000, மாற்றுத்திறனாளிக்கு, 210 என்ற அளவில் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன. நோய் பரவலை தடுக்க, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மக்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுழற்சி முறை தேவை: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், கொண்டலாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர, அந்த சுகாதார நிலையங்கள் முறையே, தம்மநாயக்கன்பட்டி, பாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, குள்ளப்பநாயக்கனூரில், கடந்த நான்கு முறை தடுப்பூசி முகாம் நடந்தது. இன்றும், அந்த இடங்களில் முகாம் நடக்கிறது. இதனால், நெய்க்காரப்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, கம்மாளப்பட்டி என, மற்ற கிராமங்களிலும் சுழற்சி முறையில் முகாம் நடத்த மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X