பொது செய்தி

தமிழ்நாடு

அரிசி, பருப்பு வாங்க 14 கி.மீ., நடைபயணம்; ரேஷன் கடை அவசியம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: தார்ச்சாலை அமைக்கப்பட்டதால், ஜருகுமலையில் ரேஷன் கடை கட்ட கோரிக்கை எழுந்துள்ளது. சேலம், ஜருகுமலை, 3,000 அடி உயரத்தில் உள்ளது. அங்குள்ள இரு கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அங்கு, ரேஷன் கடை இல்லை. மலையில் இருந்து, 7 கி.மீ., இறங்கி, சன்னியாசிகுண்டு ரேஷன் கடைக்கு வரவேண்டும். அங்கு

பனமரத்துப்பட்டி: தார்ச்சாலை அமைக்கப்பட்டதால், ஜருகுமலையில் ரேஷன் கடை கட்ட கோரிக்கை எழுந்துள்ளது. சேலம், ஜருகுமலை, 3,000 அடி உயரத்தில் உள்ளது. அங்குள்ள இரு கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அங்கு, ரேஷன் கடை இல்லை. மலையில் இருந்து, 7 கி.மீ., இறங்கி, சன்னியாசிகுண்டு ரேஷன் கடைக்கு வரவேண்டும். அங்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு, மீண்டும் மலைப்பாதையில், 7 கி.மீ., செல்லவேண்டும். ரேஷன் பொருளுக்கு, 14 கி.மீ., நடைபயணம் சென்று மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஜருகுமலை கதிர்வேல், 25, கூறியதாவது: கடந்த காலங்களில், ஜருகு மலைக்கு சாலை வசதி இல்லாததால், ரேஷன் பொருட்களை மலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. சமீபத்தில் ஜருகுமலைக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. வாகனம் மூலம், ரேஷன் பொருட்களை கொண்டு வந்து வழங்கலாம். அடிவாரத்தில், கடை உள்ளதால், என்ன பொருட்கள் எப்போது வழங்கப்படுகிறது. கடை திறந்திருக்கும் நேரம் உள்ளிட்டவை தெரிவதில்லை. பொருட்களை வாங்கிகொண்டு, அடிவாரத்திலிருந்து மலை ஏறி வர, மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஜருகுமலையில் ரேஷன் கடை கட்டி, அங்கேயே பொருட்கள் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X