பொது செய்தி

தமிழ்நாடு

பால் விலை உயர்த்த வலியுறுத்தல்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சேலம்: பால் உற்பத்தியாளர், விவசாயிகள் நலன்கருதி, பால் விலையை உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தலைவர் ரத்னகுமார், பொதுச்செயலர் ராஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம், தபாலில் அனுப்பிய மனு: கடந்த, 2019 ஆகஸ்டில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்த்தப்பட்டது. 24 மாதங்களில் கறவை மாடுகளுக்கு தேவையான அன்றாட உணவான

சேலம்: பால் உற்பத்தியாளர், விவசாயிகள் நலன்கருதி, பால் விலையை உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தலைவர் ரத்னகுமார், பொதுச்செயலர் ராஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம், தபாலில் அனுப்பிய மனு: கடந்த, 2019 ஆகஸ்டில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்த்தப்பட்டது. 24 மாதங்களில் கறவை மாடுகளுக்கு தேவையான அன்றாட உணவான சோளத்தட்டு, வைக்கோல், பசும்புல், கலப்பு தீவன மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப பால் விலையை உயர்த்தாததால், உற்பத்தியாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது பசும்பால் விலை லிட்டர், 32ல் இருந்து, 10 ரூபாய் உயர்த்தியும், எருமைப்பால், 41ல் இருந்து, 16 ரூபாய் உயர்த்தியும் நிர்ணயிக்க வேண்டும். இந்த கொள்முதல் விலைக்கு ஏற்ப விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். சமச்சீர் கால்நடை கலப்பு தீவனத்தை, 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில் பால் வழங்க உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X