பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே மின்பாதை பணி ஜரூர்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
தர்மபுரி: மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம் மூலம், நாடு முழுவதும் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் இருந்து தர்மபுரி வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அனைத்து பயணிகள், சரக்கு ரயில்களை, மின்பாதையில் இயக்க நடவடிக்கை எடுத்தது. ஏற்கனவே, ஓசூர், பாலக்கோடு வரை இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து,

தர்மபுரி: மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம் மூலம், நாடு முழுவதும் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் இருந்து தர்மபுரி வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அனைத்து பயணிகள், சரக்கு ரயில்களை, மின்பாதையில் இயக்க நடவடிக்கை எடுத்தது. ஏற்கனவே, ஓசூர், பாலக்கோடு வரை இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இவ்வழித்தடங்களில் மின்சார ரயில் சோதனை ஓட்டமும் நடந்தது. தற்போது, பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி அடுத்த சிவாடி வரை, ரயில் தடத்தில் மின்கம்பிகள் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மின்கம்பிகள் அமைக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, தர்மபுரி வரை மின்கம்பி அமைக்கும் பணிகள் முழுவதும் முடிந்துள்ளதால், விரைவில் பெங்களூருவில் இருந்து தர்மபுரி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளதாகவும், ஓமலூர் வரையில் மின்சார வழித்தடம் அமைக்கப்பட்ட பின், பெங்களூரு - தர்மபுரி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மின்சார வழித்தடத்தில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X