நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: எச்.ராஜா முன்ஜாமின் தள்ளுபடி

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (67) | |
Advertisement
மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரி பா.ஜ.,வின் எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய
HRaja, எச்ராஜா, நீதிமன்ற அவமதிப்பு, முன்ஜாமின்

மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரி பா.ஜ.,வின் எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், எச்.ராஜா தாக்கல் செய்த மனுவில், ‛உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் வழங்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எச்.ராஜா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. மேலும் இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Peruvalam -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202106:37:50 IST Report Abuse
G Peruvalam Dinamalar is always Dinamalar. Good jop.Thanks for your comments Team.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூலை-202100:01:21 IST Report Abuse
தமிழவேல் மன்னிப்பு கேட்டுட்ட மனுஷனை விட்டுடலாம். திரும்பவும் இதுபோல நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு எச்சரிக்கை செய்து அடுத்தமுறை நடந்தால், தரப்போகும் தண்டனையை அறிவிக்கலாம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூலை-202122:26:26 IST Report Abuse
Pugazh V @விசு பாய் - கொச்சியில் ஏது மலேஷியா? உங்களுக்கு பொறாமையாக இருக்கோ?? நான் கோலாலம்பூரைத் தலைநகராகக் கொண்ட மலேஷியாவில் ஜார்ஜ் டவுன்லோட், ஷா ஆலம், போன்ற நகரங்களில் பல ப்ராஜெக்ட்களுக்காகச் சென்றிருக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X