பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று மாத நிலுவை ஊதியம் வழங்கக்கேட்டு தீர்மானம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு, ஏ.ஐ.டி.யு.சி., ஆஷா பணியாளர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார். இதில், ஆஷா பணியாளர்களை சமூக பணியாளர்களாக ஏற்று, நிரந்தரப்படுத்த வேண்டும். ஆஷா பணியாளர்களின் அனுபவத்தின்படி, கிராம செவிலியர் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். மேற்பார்வையாளர்களை, அரசு செவிலியர்களாக பணி அமர்த்தப்பட வேண்டும்.

தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு, ஏ.ஐ.டி.யு.சி., ஆஷா பணியாளர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார். இதில், ஆஷா பணியாளர்களை சமூக பணியாளர்களாக ஏற்று, நிரந்தரப்படுத்த வேண்டும். ஆஷா பணியாளர்களின் அனுபவத்தின்படி, கிராம செவிலியர் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். மேற்பார்வையாளர்களை, அரசு செவிலியர்களாக பணி அமர்த்தப்பட வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மூன்று மாத நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்காமல் உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X