ரூ.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

Added : ஜூலை 19, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், கடந்த, 15 நாட்களில் மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 103 விவசாயிகள், 194 குவியல்களாக, 7,398 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 235 முதல், 439 ரூபாய் வரை சராசரியாக, 402

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், கடந்த, 15 நாட்களில் மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 103 விவசாயிகள், 194 குவியல்களாக, 7,398 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 235 முதல், 439 ரூபாய் வரை சராசரியாக, 402 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 29 லட்சத்து, 72 ஆயிரத்து, 15 ரூபாய். கடந்த, 15 நாட்களில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 44 ஆயிரத்து, 578 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X