பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்' குழுவில் தவறான தகவல் வெளியானால் நடவடிக்கை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
அரூர்: அரூரிலுள்ள ஒரு, 'வாட்ஸ் ஆப்' குழுவில், அரூர் டவுன் பஞ்.,ல் உள்ள சில அடிப்படை வசதிகள் குறைகள் குறித்த பதிவுகள் வெளியாகின. இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி அந்த, 'வாட்ஸ் ஆப்' குழுவில் அளித்த பதிவில், 'இந்த தளம், டவுன் பஞ்., நிர்வாக புகார் தளம் அல்ல. இந்த புகார்கள் குறித்த தகவல் டவுன் பஞ்., அலுவலகத்துக்கு வரவில்லை. இருப்பினும், இதை சரிசெய்ய நடவடிக்கை

அரூர்: அரூரிலுள்ள ஒரு, 'வாட்ஸ் ஆப்' குழுவில், அரூர் டவுன் பஞ்.,ல் உள்ள சில அடிப்படை வசதிகள் குறைகள் குறித்த பதிவுகள் வெளியாகின. இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி அந்த, 'வாட்ஸ் ஆப்' குழுவில் அளித்த பதிவில், 'இந்த தளம், டவுன் பஞ்., நிர்வாக புகார் தளம் அல்ல. இந்த புகார்கள் குறித்த தகவல் டவுன் பஞ்., அலுவலகத்துக்கு வரவில்லை. இருப்பினும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எவ்வித ஆதாரமுமின்றி புகார் கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் டவுன் பஞ்., நிர்வாகம் தொடர்பாக பொய்யான தகவல்கள் இக்குழுவில் இடம்பெற்றால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சம்மந்தப்பட்ட நபர் மற்றும் அட்மின் முழு பொறுப்பேற்க நேரிடும்' என எச்சரித்துள்ளார். இது குறித்து, அவரிடம் கேட்டபோது, ''பொதுமக்கள் அளிக்கும் புகாரின்படி, நானும், ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், பொதுவெளியில் பதிவிடுவது தவறானது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X