சாலைகளில் காய்கறி மார்க்கெட்: வாகன நெரிசல்; விபத்து அச்சம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரின், பெங்களூரு சாலையில் வைத்துள்ள காய்கறி கடைகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, சந்தைப்பேட்டையில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட்டை கொரோனா காலத்தில், அரசு ஆண்கள் பள்ளி மைதானத்துக்கு நகராட்சி நிர்வாகம் மாற்றியது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில், பள்ளி மைதானத்திலும் காய்கறி கடைகள் வைக்காமல்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரின், பெங்களூரு சாலையில் வைத்துள்ள காய்கறி கடைகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, சந்தைப்பேட்டையில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட்டை கொரோனா காலத்தில், அரசு ஆண்கள் பள்ளி மைதானத்துக்கு நகராட்சி நிர்வாகம் மாற்றியது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில், பள்ளி மைதானத்திலும் காய்கறி கடைகள் வைக்காமல், கிருஷ்ணகிரி நகரின், பெங்களூரு சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருகின்றனர். சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை இறக்கும் பணியில் ஈடுபடும்போது, போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. மேலும், கழிவு காய்கறிகளை கழிவுநீர் சாக்கடை கால்வாய்களில் போடுவதால் அடைப்பும் ஏற்படுகிறது. கடந்த, 50 ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகளுக்கு, தனி மார்க்கெட் வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு நிலையான விற்பனை நிலையங்களை மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஏற்படுத்தி தந்தால், மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X