சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 19, 2021
Share
ஓசூர்: ஓசூர், பஸ்தி சாலையிலுள்ள ராஜிவ் நகரில், சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெயவீரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வன்னியருக்கு வழங்கிய, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும். மத்திய அரசின் உத்தரவுப்படி, முறையான, டி.என்.டி., கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என

ஓசூர்: ஓசூர், பஸ்தி சாலையிலுள்ள ராஜிவ் நகரில், சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெயவீரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வன்னியருக்கு வழங்கிய, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும். மத்திய அரசின் உத்தரவுப்படி, முறையான, டி.என்.டி., கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில், ஓசூர், நரிக்குறவர் மேம்பாட்டு கழக தலைவர் ஜல்கேஷ், போயர் முன்னேற்ற நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X