பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்து கடைகள்; வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சி ரவுண்டானாவை சுற்றியுள்ள ஐந்து சாலைகளிலும், வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா பரவலால் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதிய

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சி ரவுண்டானாவை சுற்றியுள்ள ஐந்து சாலைகளிலும், வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா பரவலால் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றப்பட்டது. இதனால், வியாபாரிகள் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து மிகுந்த பெங்களூரு சாலை, சென்னை சாலை மற்றும் சேலம் சாலைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலையோரம் கடைகள் வைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதால், உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், பல வியாபாரிகள் அங்கு செல்லாமல் சாலையோரத்திலேயே கடைகளை வைத்துள்ளனர். இதனால், தினமும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கடந்தாண்டு முதல் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளவர்களை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X