பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து மழை பெய்தாலும் நீர்வரத்து இல்லாத கே.ஆர்.பி., அணை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தினமும் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தும், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து போதிய அளவு அதிகரிக்கவில்லை. நேற்று முன்தினம், அணைக்கு, 278 கன அடி நீர்வரத்தான நிலையில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தினமும் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தும், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து போதிய அளவு அதிகரிக்கவில்லை. நேற்று முன்தினம், அணைக்கு, 278 கன அடி நீர்வரத்தான நிலையில் நேற்று, 266 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 45.75 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 12 கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சூளகிரியில், 96 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், கிருஷ்ணகிரி, 40.2, ஊத்தங்கரை, 35, பாரூர், 29, பெனுகொண்டாபுரம், 17.4, தேன்கனிக்கோட்டை, 17, போச்சம்பள்ளி, 16.2, தளி, 15, நெடுங்கல், 14.4, அஞ்செட்டி, ராயக்கோட்டை, 10, ஓசூர், 8 என மொத்தம், 308.2 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக, 25.68 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X