செம்மை நெல் சாகுபடி செய்து ரூ.5 லட்சம் பரிசு பெற அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்மை நெல் சாகுபடி செய்து ரூ.5 லட்சம் பரிசு பெற அழைப்பு

Added : ஜூலை 19, 2021
Share
கிருஷ்ணகிரி: செம்மை நெல் சாகுபடி செய்து, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் பெற விவசாயிகள் முயற்சி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க, மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக, ஐந்து

கிருஷ்ணகிரி: செம்மை நெல் சாகுபடி செய்து, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் பெற விவசாயிகள் முயற்சி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க, மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக, ஐந்து லட்சம் ரூபாயும், 7,000 ரூபாய் மதிப்பில் பதக்கமும் வழங்கப்படுகிறது. பரிசு தொகையை பெற, செம்மை நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேண்டும். நெல் நடவு செய்து, 15 நாட்கள் கழித்து, 150 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்தி வேளாண் விரிவாக்க மையத்தில் ரசீது பெற வேண்டும். விவசாயியின் பெயர், முகவரி, நெல் ரகம், பயிரிடும் பரப்பு, உத்தேச அறுவடை தேதியுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுக வேண்டும். அறுவடை சமயத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட தலைமை அதிகாரி, வேளாண் இணை இயக்குனர் பதவி அளவில் வேறு மாவட்டத்தில் இருந்து பதிவு செய்த விவசாயியின் வயலில், அறுவடை பரிசோதனை மேற்பார்வையிடுவார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அதிக மகசூல் பெறும் விவசாயிகள் தேர்தெடுக்கப்பட்டு, மாநில போட்டிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X