பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகாரளிக்க மொபைல் எண் வெளியீடு

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடுகள், கடைகளுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய மின்சாதனங்களுடன், எர்த்திங் வசதியுடன் கூடிய மூன்றுபின் சாக்கெட்டுகளை பயன்படுத்தவும். மின்கம்பத்தின் ஸ்டே கம்பிகளில், கால்நடைகளை கட்டுவதோ, ஈர துணிகளை உலர்த்துவதோ கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், மின்தடை குறித்து, 1912

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடுகள், கடைகளுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய மின்சாதனங்களுடன், எர்த்திங் வசதியுடன் கூடிய மூன்றுபின் சாக்கெட்டுகளை பயன்படுத்தவும். மின்கம்பத்தின் ஸ்டே கம்பிகளில், கால்நடைகளை கட்டுவதோ, ஈர துணிகளை உலர்த்துவதோ கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், மின்தடை குறித்து, 1912 எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்கம்பங்களையொட்டி மரக்கிளைகள் சென்றால், மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். மின்சார தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து, மின்வாரிய அலுவலங்களுக்கு தெரிவிக்கவும். ஈரக்கைகளால் மின் சாதனங்களை தொடவோ, இயக்கவோ கூடாது. மின் பாதிப்புக்கு உள்ளானவரை மின் துண்டிப்பு அல்லது உலர்ந்த கட்டைகள் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டும். மின்பாதைகளுக்கு அருகில் மரம் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களில் பதாகைகள், கேபிள் 'டிவி' ஒயர்கள் கட்டக்கூடாது. மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள இழுவை கம்பிகளை அறுக்கக்கூடாது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமான மின்கம்பங்கள் இருந்தால், 63800 06162 என்ற, 'வாட்ஸ் ஆப்'பில் போட்டா அனுப்பவும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X