ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக துவரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக துவரை

Added : ஜூலை 19, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரீப் பருவத்தில் ஆடி பட்டத்துக்கு ஏற்ற மழை, தற்போது பெய்து வருவதால், நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர். அதேபோல், மானாவாரி பயறு வகைகளான உளுந்து, காராமணி, பச்சைப்பயறு, துவரை பயிர்களும், எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரீப் பருவத்தில் ஆடி பட்டத்துக்கு ஏற்ற மழை, தற்போது பெய்து வருவதால், நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர். அதேபோல், மானாவாரி பயறு வகைகளான உளுந்து, காராமணி, பச்சைப்பயறு, துவரை பயிர்களும், எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, சூளகிரி, வேப்பனஹள்ளி பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டுதோறும், 15 ஆயிரம் ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, 25 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக துவரை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ஐந்து வரிசை நிலக்கடலையில், ஒருவரிசை துவரை பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் இழப்பு ஏதும் ஏற்பட்டால், அதை ஊடுபயிரான துவரையில் ஈடுகட்ட பெரும்பான்மையான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக துவரை பயிரிடப்படுவது வழக்கம். தற்போது போதிய மழை பெய்து வருவதாலும், ஆடி பட்டம் துவங்கி உள்ளதாலும், நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ஊடுபயிராக துவரையும் பயிரிட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X