சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை: வேலைக்கார பெண், கணவர் கைது

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வேலைக்கார பெண்ணையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பிராங்க்ளின், 40. தந்தை இறந்து விட்டதால், தாய் ஜோஸ்பின் மேரி, 65 உடன் வசித்து வந்தார். பிராங்க்ளின், மதுரையில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக இருப்பதால், 14ம் தேதி வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் இரவு தாய்க்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வேலைக்கார பெண்ணையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.


தஞ்சாவூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பிராங்க்ளின், 40. தந்தை இறந்து விட்டதால், தாய் ஜோஸ்பின் மேரி, 65 உடன் வசித்து வந்தார். பிராங்க்ளின், மதுரையில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக இருப்பதால், 14ம் தேதி வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் இரவு தாய்க்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவில்லை. தங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது, ஜோஸ்பின் மேரி வீட்டுக்குள் சோபாவில் இறந்து கிடந்தார். ஜோஸ்பின் மேரி அணிந்திருந்த, 5 சவரன் செயின், வளையல் ஆகியவை காணாமல் போயிருந்தது. தாய் மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவக் கல்லூரி போலீசில் பிராங்க்ளின் புகார் அளித்தார். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. வீட்டில் வேலை பார்த்த ஆரோக்கிய டென்சி, 34 என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், ஜோஸ்பின் மேரியை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து, 5 சவரன் நகையை திருடியதும், அவரது மொபைல் போனை தண்ணீர் தொட்டியில் வீசியதையும் ஒப்புக் கொண்டார். மேலும், ஜோஸ்பின்மேரி இறுதி சடங்கில் எதுவும் தெரியாதது போல் கலந்து கொண்டு நாடகமாடியதும் தெரிந்தது. திருடிய நகையை தன் கணவர் யோபேல் விக்டர், 35 என்பவரிடம் கொடுத்து, அடகு வைத்து பணமாக்கியுள்ளார். இது தொடர்பாக, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X