சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவருக்கு 'மாஜி' நிர்வாகி 'சங்கறுப்பு' மிரட்டல்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
திருச்சி: மணல் கடத்திய வழக்கில் சிக்கி குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள, தி.மு.க., 'மாஜி' நிர்வாகி முன்னாள் பஞ்., தலைவருக்கு, 'சங்கை அறுத்து கொலை செய்து விடுவேன்' என மிரட்டல் விடுத்த ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 42. மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளராக இருந்தார். மணல்

திருச்சி: மணல் கடத்திய வழக்கில் சிக்கி குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள, தி.மு.க., 'மாஜி' நிர்வாகி முன்னாள் பஞ்., தலைவருக்கு, 'சங்கை அறுத்து கொலை செய்து விடுவேன்' என மிரட்டல் விடுத்த ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 42. மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளராக இருந்தார். மணல் கடத்தல் வழக்கில் போலீசாரை மிரட்டிய விவகாரத்தில் சிக்கியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தேடி வரும் நிலையில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், தி.மு.க., மூத்த நிர்வாகியான கலிங்கப்பட்டி முன்னாள் பஞ்., தலைவர் ராமசாமியை ஆரோக்கியசாமி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: என்னைப் பற்றி பதிவு போட நீ யார் உன்னை சங்க அறுத்துறுவேன். எங்கள் அமைச்சர் அவர். அவர் படத்தை நீ எப்படி பயன்படுத்தலாம். என் நகர்வுகள் வேறு மாதிரி இருக்கும். நாளைக்கு காலைல நீ இருக்க மாட்ட. ஆரோக்கியம் பவர காண்பித்த நீ தாங்க மாட்ட. சுள்ளானோட சேர்ந்துகிட்டு எனக்கு எதிரா செயல்பட்டா ஆளே இருக்க மாட்ட. நான் சொன்னா சங்க அறுத்து போட்டுருவாங்க. ஜாக்கிரதை. நான் வேணும்னா பதவியை ராஜினாமா செய்றேன். முடிந்தால் தேர்தலில் நின்று ஜெயித்து காட்டு. யார் கிட்ட மோதுற? இவ்வாறு ஆரோக்கியசாமி பேசி உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராமசாமிக்கு தான் சீட் கிடைப்பதாக இருந்தது. அவரை சரிக்கட்டி தன் மனைவிக்கு சீட் வாங்கி ஜெயிக்க வைத்த ஆரோக்கியசாமி இப்போது, தி.மு.க.,வில் சீட் கிடைத்தாலும் உன்னை ஜெயிக்கவிட மாட்டேன் என்ற தொனியில் மிரட்டி உள்ளது தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குண்டர் சட்டம்? ஆரோக்கியசாமி, 10 ஆண்டுகளுக்கு மேலாக மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களில் மட்டும் நான்கு முறைக்கு மேல் இவரது வாகனங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளன. மேலும் வக்கீலை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார். தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருவதால் அவரை கைது செய்தபின் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X