பொது செய்தி

தமிழ்நாடு

குருநாதசுவாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா ரத்து

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
அந்தியூர்: பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் தேரோட்டம், கால்நடை சந்தை, இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம், தேர்த்திருவிழா மற்றும் பிரமாண்டமான கால்நடை சந்தை நடக்கும். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வியாபாரிகள்,

அந்தியூர்: பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் தேரோட்டம், கால்நடை சந்தை, இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம், தேர்த்திருவிழா மற்றும் பிரமாண்டமான கால்நடை சந்தை நடக்கும். தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வருவர். தேரோட்ட விழா களை கட்டும். லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள். ஆனால், கொரோனா தொற்றால், கடந்த ஆண்டு கோவில் திருவிழா நடக்கவில்லை. இதேபோல் நடப்பாண்டும், ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக, திருவிழா ரத்தானதால், பக்தர்கள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X