பொது செய்தி

தமிழ்நாடு

வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு: முன்னாள் முதல்வர் படம் எரிப்பு

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கரூர்: வன்னியர் சமூகத்துக்கு, உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, கரூர் அருகே முன்னாள் முதல்வர் பழனிசாமி படம் எரிக்கப்பட்டது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக பழனிசாமி இருந்தபோது, வன்னியர் சமூகத்துக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,

கரூர்: வன்னியர் சமூகத்துக்கு, உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, கரூர் அருகே முன்னாள் முதல்வர் பழனிசாமி படம் எரிக்கப்பட்டது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக பழனிசாமி இருந்தபோது, வன்னியர் சமூகத்துக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அதை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற, 115 சமூகத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, கரூர் அருகே ராயனூர் பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை, 9:00 மணிக்கு கரூர் மாவட்ட, 115 சமுதாய கூட்டமைப்பு மற்றும் சீர்மரபினர் நலச்சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில், கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது, பசுபதிபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், ராயனூர் அண்ணா நகரில் முருகேசன் தலைமையில் நேற்று காலை, 11:00 மணிக்கு நான்கு பேர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் படத்தை எரித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X