பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தென்பெண்ணையில் 400 கன அடி வெளியேற்றம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து, 587 கன அடியாக அதிகரித்ததால், தென்பெண்ணையாற்றில், 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் வரை தொடர்ந்து, 11 நாட்கள், 400 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில், 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து, 587 கன அடியாக அதிகரித்ததால், தென்பெண்ணையாற்றில், 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் வரை தொடர்ந்து, 11 நாட்கள், 400 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில், 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 587 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 37.39 அடிக்கு மட்டுமே நீர்இருப்பு இருந்ததால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து, 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, 48 அடியை எட்டாமல் உள்ளதால், அங்கு பாசனத்துக்கு இதுவரை நீர் திறக்கப்படவில்லை. அதனால், கெலவரப்பள்ளி அணையிலும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது, ஓசூர் பகுதியில் மழை பெய்து பாசன விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இருந்தாலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தாமதம் செய்யாமல், தண்ணீர் திறக்க விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X