பொது செய்தி

தமிழ்நாடு

'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை வீட்டில் வசிக்கும் முருகனின் பெற்றோர்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
நாமக்கல்: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனின் பெற்றோர், 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை வேய்ந்த வீட்டில் எளிமையாக வசிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி லோகநாதன், 65, வருதம்மாள், 60. இவர்களது மகன் முருகன், 44; மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர். மகன் மத்திய அமைச்சராக பதவியேற்ற போதும், அவரது பெற்றோர் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக,

நாமக்கல்: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனின் பெற்றோர், 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை வேய்ந்த வீட்டில் எளிமையாக வசிக்கின்றனர்.


நாமக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி லோகநாதன், 65, வருதம்மாள், 60. இவர்களது மகன் முருகன், 44; மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர். மகன் மத்திய அமைச்சராக பதவியேற்ற போதும், அவரது பெற்றோர் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக, விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வக்கீல் படிப்பை முடித்த முருகன், பா.ஜ.,வில் இணைந்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாநில துணைத் தலைவர், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத் தலைவர், பா.ஜ., மாநில தலைவர் என, படிப்படியாக உயர்ந்து, தற்போது மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார். அவரது மனைவி கலையரசி, சென்னையில் குழந்தைகள் நல மருத்துவர். பிளஸ் 2 படிக்கும் தர்னீஷ் என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்திரஜித் என்ற மகனும் உள்ளனர். முருகன், போலீஸ் பாதுகாப்புடன் சைரன் காரில் வலம் வந்தாலும், அவரது பெற்றோர், ஹாலோபிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் எளிமையாக வசிக்கின்றனர்.

லோகநாதன் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் ராமசாமிக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளன. 2016ல், உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமசாமி இறந்து விட்டார். மருமகள் சாந்தி, மூன்று பேரக் குழந்தைகள் எங்களுடன்தான் உள்ளனர். நான், 16 வயதில் விவசாய பணிக்கு வந்து விட்டேன். மூத்த மகன் முருகன், சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பார். பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். தொடர்ந்து, வக்கீல் படித்து முடித்தார். படிப்படியாக உயர்ந்து, தற்போது அமைச்சராகியுள்ளார். இது, எங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடன் தங்கச் சொல்லி அடிக்கடி அழைப்பார். நாங்கள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முருகனின் நண்பரும், வக்கீலுமான பொன்னுசாமி கூறுகையில், ''என் நண்பர் முருகன் படிக்கிற காலத்தில், ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பில் இணைந்தார். தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., கூட்டங்களில் பங்கேற்றார். மத்திய இணை அமைச்சர் பதவி, அவரது உழைப்புக்கு கிடைத்த பரிசு,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X