இலவச டிக்கெட்டுக்கு பணம் வசூல்: சேலத்தில் கண்டக்டர் சஸ்பெண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச டிக்கெட்டுக்கு பணம் வசூல்: சேலத்தில் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 19, 2021
Share
சேலம்: சேலத்தில், அரசு பஸ்சில் இலவச டிக்கெட்டுக்கு, பணம் வசூலித்த கண்டக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.அரசு டவுன் பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கையர் இலவசமாக பயணித்தாலும், டிக்கெட் வழங்கப்படுகிறது. இவற்றை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு சோதனையும் நடக்கிறது. சேலம், எருமாபாளையம் கிளை 1ல், டவுன் பஸ் எண்: 13, ஜங்ஷனில் இருந்து நேற்று காலை, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு

சேலம்: சேலத்தில், அரசு பஸ்சில் இலவச டிக்கெட்டுக்கு, பணம் வசூலித்த கண்டக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


அரசு டவுன் பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கையர் இலவசமாக பயணித்தாலும், டிக்கெட் வழங்கப்படுகிறது. இவற்றை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு சோதனையும் நடக்கிறது. சேலம், எருமாபாளையம் கிளை 1ல், டவுன் பஸ் எண்: 13, ஜங்ஷனில் இருந்து நேற்று காலை, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டது. பீஹாரை சேர்ந்த, 20 பயணிகள் பயணித்தனர். அதில் ஐந்து பேர் பெண்கள். அவர்களுக்கு கண்டக்டர் நவீன்குமார், 40, டிக்கெட் கொடுத்து, கட்டணம் வசூலித்தார். ஐந்து ரோட்டுக்கு பஸ் வந்தபோது, கண்காணிப்பு குழுவினர், பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதித்தனர். இதில் வடமாநில பெண்களுக்கு, இலவச டிக்கெட் கொடுத்து, பணம் வசூலித்ததையும் கண்டு பிடித்தனர். இதனால் கண்டக்டர் நவீன் குமாரை, கிளை மேலாளர் பழனிவேல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X