சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் பிடிக்க முயன்றதால் கழுத்தை அறுத்து மிரட்டிய ரவுடி

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூரில், போலீசார் பிடிக்க முயன்றபோது, கழுத்தை லேசாக அறுத்துக்கொண்டு, ரவுடி தற்கொலைக்கு முயன்று மிரட்டினார். சேலம் மாவட்டம் மேட்டூர், கிழக்கு சாலை, விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; ரவுடியான இவர் மீது எட்டு வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில், கொளத்தூர் போலீசார், ஒன்பது மாதங்களாக தேடி வந்தனர். ராமமூர்த்தி நேற்று வீட்டில் உள்ளதாக தகவல்

மேட்டூர்: மேட்டூரில், போலீசார் பிடிக்க முயன்றபோது, கழுத்தை லேசாக அறுத்துக்கொண்டு, ரவுடி தற்கொலைக்கு முயன்று மிரட்டினார். சேலம் மாவட்டம் மேட்டூர், கிழக்கு சாலை, விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; ரவுடியான இவர் மீது எட்டு வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில், கொளத்தூர் போலீசார், ஒன்பது மாதங்களாக தேடி வந்தனர். ராமமூர்த்தி நேற்று வீட்டில் உள்ளதாக தகவல் கிடைக்கவே, இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் சென்றனர். இதனால் பயந்து போன அவர், கத்தியால் கழுத்தில் லேசாக அறுத்துக்கொண்டு, கைது செய்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டினார். குடும்பத்தினரிடம் பேசி, ராமமூர்த்தியை அழைத்து சென்ற போலீசார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே ஒருமுறை போலீசார் பிடிக்க சென்றபோது, விரலை வெட்டிக்கொண்டு ராமமூர்த்தி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X