பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவையில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (ஜூலை 19): நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி)
Nilgiris, Coimbatore, HeavyRain, Weather Report, நீலகிரி, கோவை, கனமழை, வானிலை

சென்னை: ‛‛தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவையில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (ஜூலை 19): நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.


நாளை (ஜூலை 20):


நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை) 7 செ.மீ., புழல் (திருவள்ளூர்) 5 செ.மீ., வால்பாறை தாலுகா ஆபீஸ் (கோவை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) பொன்னேரி (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்) தலா 4 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வடமேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.


வங்க கடல் பகுதிகள்:


இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை: தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.


latest tamil news


இன்று, நாளை: தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை: வடக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X