சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி திருடிய அக்கா, தம்பி உள்பட 4 பேர் கைது: மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூரில், 'டாரஸ்' லாரியை திருடிய கும்பல், மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர். அக்கா, தம்பி உள்பட நான்கு பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் மணிமாறன், 40; தனக்கு சொந்தமான டாரஸ் லாரியை, புதுப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் முன், கடந்த, 5ம் தேதி மாலை, நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் அதிகாலை

ஆத்தூர்: ஆத்தூரில், 'டாரஸ்' லாரியை திருடிய கும்பல், மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர். அக்கா, தம்பி உள்பட நான்கு பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் மணிமாறன், 40; தனக்கு சொந்தமான டாரஸ் லாரியை, புதுப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் முன், கடந்த, 5ம் தேதி மாலை, நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் அதிகாலை சென்றபோது காணவில்லை. ஆத்தூர் டவுன் போலீசில் புகாரளித்தார். டி.எஸ்.பி., இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில், இரு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஆத்தூர் புறவழிச்சாலை செல்லியம்பாளையத்தில், போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக திரிந்த, கோவை, தெலுங்குபாளையம் சுரேஷ், 34, உக்கடம் சோமசுந்தரம், 39, ஈரோடு, சத்தியமங்கலம் சித்ரா, 39, ரங்கசமுத்திரம் சதீஷ், 34, ஆகியோரை பிடித்தனர். புதுப்பேட்டையில் லாரி திருடியது தெரிய வந்தது. மீண்டும் திருட வந்ததாக தெரிவித்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஓமலூர் சிறையில் அடைத்தனர். தனிப்படையினர் கூறுகையில், 'லாரி திருட்டு வழக்கில் கைதான சுரேஷ், கடன் பிரச்னையில் இருந்தார். அவரது அக்கா சித்ரா உதவியுடன், ஆத்தூரில் லாரி திருட வந்துள்ளனர். இங்கு திருடிய லாரியை, மேட்டுப்பாளையத்தில் விற்றுள்ளனர். மீண்டும் லாரி திருட வந்தபோது சிக்கினர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X