சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தலுக்கு உடந்தை: போக்சோவில் இருவர் கைது

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
போளூர்: போளூர் அருகே, பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இருவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார், 28, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியை கடந்த 7ல், காரில் கடத்தி சென்றார். போளூர் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில்

போளூர்: போளூர் அருகே, பள்ளி மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இருவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார், 28, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியை கடந்த 7ல், காரில் கடத்தி சென்றார். போளூர் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாணவி மட்டும் தனியாக ஊருக்கு வந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், சசிகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காரில் அழைத்து சென்று தாலி கட்டினார் என்றும், இதற்கு எழுவாம்பாடி கிராமத்தை சேர்ந்த பர்வதம், 40, ஓகூரை சேர்ந்த ஏழுமலை, 42, ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி கூறினார். இந்த வழக்கில், சசிகுமார் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தலைமறைவாக இருந்த பர்வதம், ஏழுமலை ஆகிய இருவர் மீதும், போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X