சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரணியில் பலத்த மழை; மேற்கூரை விழுந்து மூதாட்டி பலி

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணியில் பலத்த மழை பெய்து, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி ஜெகதாம்பாள், 75. கணவரை இழந்தவர்; இவரது மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஓட்டு வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து

ஆரணி: ஆரணியில் பலத்த மழை பெய்து, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி ஜெகதாம்பாள், 75. கணவரை இழந்தவர்; இவரது மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஓட்டு வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, பெய்த பலத்த மழையால் அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆரணி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X