பொது செய்தி

இந்தியா

பெகாசஸ் ஸ்பைவேர்-ல் இருந்து தப்புவது எப்படி?

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் 'பெகாசஸ்' ஸ்பைவேர் செயலியை அறிமுகப்படுத்தியது. இது உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகாசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்குதளங்களிலும் ஊடுருவி
Pegasus Spyware, Israeli Spyware, Affected Phones, பெகாசஸ் ஸ்பைவேர், இஸ்ரேல், மொபைல், போன், பாதுகாப்பு, உளவு

புதுடில்லி: இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் 'பெகாசஸ்' ஸ்பைவேர் செயலியை அறிமுகப்படுத்தியது. இது உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகாசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்குதளங்களிலும் ஊடுருவி பயனர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும்.

அந்த வகையில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 400 இந்தியர்களின் போன்களில் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகின. அதிலும், இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றி வரும் 40 மூத்த பத்திரிக்கையாளர்களின் போன்களில் இந்த ஸ்பைவேர் இருப்பதாகவும், அவர்களின் போன் உரையாடல்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக பிரான்ஸிக் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தகவல்கள் திருட்டில் ஈடுபட்ட பெகாசுஸின் தாய் நிறுவனம் என்.எஸ்.ஓ., இதை மறுத்துள்ளது.


latest tamil newsபெகாசஸ் என்றால் என்ன?


பயனர்களின் போன்கள் வழியாக அவர்களை உளவு பார்க்கும் இந்த பெகாசஸ் ஸ்பைவேர், வாட்ஸ்ஆப் மூலமாகவோ, அல்லது வேறு விதத்திலோ ஒரு தவறான லிங்கை அனுப்புவதன் மூலம் தன்னுடைய பணியை தொடர்கிறது. பயனர் அந்த லிங்கை கிளிக் செய்துவிட்டால், கண்காணிப்பை மேற்கொள்ள இருக்கும் மால்வேர் அல்லது கோடுகள் மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். தற்போது வெளியாகியுள்ள புதிய வெர்ஷன்களில் பயனர்கள் க்ளிக் கூட செய்ய வேண்டியது இல்லை. பெகாசஸ் ஒருமுறை இன்ஸ்டால் ஆகிவிட்டால், போனின் அனைத்து விஷயங்களையும் ஹேக் செய்யும் நபர் பெற்று விடுவார்.


latest tamil news


Advertisement


எப்படி வேலை செய்கிறது?


பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம். இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மெயில், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல் களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும். மேலும், என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்க்ரிப்ட் மெசேஜ்கள் என்பது அனுப்புநர், பெறுநர் மட்டுமே படிக்க முடியும் வகையிலான மெசேஜ் ஆகும். மெசேஜிங் தளங்களை நடத்தும் வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களால் கூட அதை பார்க்க முடியாது.


latest tamil newsஸ்பைவேரை கண்டறியலாமா?


பெகாசஸ் ஸ்பைவேரால் நமது மொபைல் பாதிக்கப்பட்டதா என்பதை கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பெகாசஸ் ஒரு அதிநவீன ஸ்பைவேர் ஆகும், இது சில தடயவியல் மற்றும் சுயமாக அழிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இதனை கண்டறிவது கடினம். ஸ்பைவேரை ஒருவழியாக கண்டறிந்து அன்-இன்ஸ்டால் செய்தாலும், ஸ்பைவேர் இருந்ததற்கான எந்த தடயங்களையும் விட்டுவைக்காமல் அழித்து விடும் அம்சமும் இதில் உள்ளது.


latest tamil news


மேலும், தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம், செயலியை விரைவாக புதுப்பிக்குமாறு பயனாளர்களுக்கு அறிவுறுத்தி மெசேஜ் அனுப்பி வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்புவது தான் தற்போதைய கண்டறியும் ஒரே வழி. உங்கள் போன் பாதுகாக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதியாக தெரிந்துகொள்ள இணைய பாதுகாப்பு நிபுணரை அணுகுவது நல்லது.


மற்ற ஆப்களையும் பாதிக்குமா?


ஹேக்கர்களால், மொபைலில் உள்ள பைல்கள், படங்கள் மற்றும் என்க்ரிப்ட் தகவல்கள் மற்றும் மெயில்களைப் படிக்க முடியும். அதேநேரத்தில் தொலைபேசியில் பிற ஆப்களை பாதிக்குமா என்பதில் இன்னும் தெளிவில்லாத நிலையே உள்ளது.


latest tamil newsமொபைல் பெகாசால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?


பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கப்பட்ட மொபைலை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பதே ஒரே வழி என பல பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதிய மொபைலை மாற்றி இருந்தாலும், அதில் இன்ஸ்டால் செய்யும் அனைத்து ஆப்களும் புதிதாகவும், சமீபத்திய மென்பொருள் வெர்ஷனைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட மொபைலில் பயன்படுத்திய பாஸ்வேர்டுகள் அனைத்தையும் புதிய மொபைலில் மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RIN -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202107:35:25 IST Report Abuse
RIN Is really tracked or is it rumour ? because exactly at parliament 1st day session opposition parties creating this issue.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
19-ஜூலை-202122:24:09 IST Report Abuse
Mirthika Sathiamoorthi தப்புரது இருக்கட்டும்..அது நாம் காண்காணிக்க படிக்கிறோம் எனும் உணர்வு வந்தபிறகு..மனதுக்குள் நியாயமா எழும் கேள்வி, இங்கே கண்காணிக்கப்படும் நபர்கள்.அந்த தகுதியில் நாம் இருக்கோமா? கிட்டத்தட்ட 300 க்கு அதிகமான நபர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் ..யார் இந்த 300 நபர்கள்? நாட்டுக்கு எதிரானவர்களா? இல்லை மக்கள் நலனுக்கு எந்த அரசையும் எதிர்த்துநிற்பவர்களா? மக்கள்மன்றத்தின் முன் உண்மையை கொண்டுசென்றவர்களா? யார் இவர்களை கண்காணித்தார்கள்? இந்த மென்பொருளை தயாரித்த நிறுவனம் இதை நாங்கள் அரசுக்கு அன்றி தனியாருக்கு விற்பதில்லை. அப்போ இங்கே கண்காணித்தவர்கள் ஆளும் தரப்பு.. கடந்தகாலங்களில் இது போன்ற கண்காணிப்பை எல்ல அரசும் முன்னெடுத்திருக்கின்றனா..ஆனால் அவர்கள் கண்காணிப்பது நாட்டின் பாதுகாப்பு இயக்கங்கள் உளவுத்துறை போன்ற அமைப்பின் மூலம் அதுவும் கண்காணிப்பு போன் ஒட்டுக்கேட்பு, ரகசியமா ஆட்களை நிறுத்தி கண்காணிக்கும் போன்ற முறைகள்...ஆனால் இந்த பெகாசஸ் அதிநவீனமான ஓன்று இதை 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் மீது உபயோகிக்க அதிகவிலை கொடுத்து இந்த அரசு வாங்கியதா? நாட்டின் பாதுகாப்புக்குன்னு சொன்ன ஏன் அதிகார பூர்வமாய் நமது பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் கண்காணிக்காமல் அதிநவீன வெளிநாட்டு மென்பொருளை உபயோகிக்கும் அளவுக்கு அப்படி என்ன பாதுகாப்பு குந்தகம் வந்திடுச்சுன்னு யார் சொல்வது? 40 நாடுகள் இதை உபயோகின்றன ஏன் இந்தியாவை மட்டும் குற்றம் சொல்றேங்க எனும் அமைச்சரின் வாதம் எதை காட்டுது? நமக்கு எதுக்கு இதிலிருந்து தப்பும் வழி தேவையில்லாமல்? நாமென்ன ஆளும் அரசுக்கு எதிராய் செயல்படபோறோமா? தப்ப சிறந்தவழி ஆளும் அரசை விமர்சிக்காமல் ஆமாம் சாமின்னு போயிட்ட நம்மளை யார் கண்காணிக்க போறா? இவளவு எளிய வழி இருக்கும்போது எதுக்கு ஒண்ணும்விளங்காத டெக்கனிகல் யோசனை...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஜூலை-202120:00:45 IST Report Abuse
Ramesh Sargam பெகாசஸ் ஸ்பைவேர்-ல் இருந்து தப்புவது எப்படி? ஒரே வழி அதுவும் சிறந்த வழி. மொபைல் போன் பயன்படுத்தவே கூடாது. வீட்டிற்கு மீண்டும் பழைய கைவிரலால் சுற்றும் போன்ஐ, எங்காவது தேடிப்பிடித்து உபயோகப்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X