பொது செய்தி

தமிழ்நாடு

மிரர் இமேஜ் எழுதி சாதித்த தனியார் மேலாளர்: நான்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேனி மாவட்டம், சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 52. ஓவியர்; 32 ஆண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்த இவர், மத்தம் அக்ரஹாரம் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சுபாஷினி, 42, என்ற மனைவி, சுபனேஷ், 25, என்ற மகன், மீனாட்சி ஸ்வேதா, 22, என்ற மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு

தேனி மாவட்டம், சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 52. ஓவியர்; 32 ஆண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்த இவர், மத்தம் அக்ரஹாரம் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சுபாஷினி, 42, என்ற மனைவி, சுபனேஷ், 25, என்ற மகன், மீனாட்சி ஸ்வேதா, 22, என்ற மகள் உள்ளனர்.



latest tamil news



கடந்த சில மாதங்களுக்கு முன், யூ டியூப்பில் வாலிபர் ஒருவர் பின்வரிசையில் ஒரு நிமிடத்தில், 20 வார்த்தைகளை எழுதியதை பார்த்தார். அதேபோல் தானும் எழுத முடிவு செய்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பான விங்க்ஸ் ஆப் பையர் என்ற புத்தகத்தை, கண்ணாடியில் பார்த்து படிக்கும் வகையில், பின்வரிசையில் மிரர் இமேஜாக எழுத துவங்கினார்.


latest tamil news





45 நாட்களில் 200 பக்கங்கள்



தினமும் வேலை முடிந்து வந்து, இரவு நேரத்தில் ஒரு நாளைக்கு, 3 முதல், 4 பக்கங்கள் வீதம், 200 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை, 45 நாட்களில் மிரர் இமேஜாக எழுதி முடித்தார். இதை பாராட்டும் வகையில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, கலாம் வேல்டு ரெக்கார்டு, பிரேவோ வேல்டு ரெக்கார்டு, இன்டர்நேஷனல் அச்சுவ்மெண்ட் இந்தியா அவார்டு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். இவரை, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
19-ஜூலை-202122:15:36 IST Report Abuse
Balaji அருமை... வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X