சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
மூட்டுவலி பாதிப்புகொரோனா பாதித்து குணமடைந்த பின் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி போன்றவை பொதுவான பிரச்னைகளாக உள்ளன என டில்லி தனியார் மருத்துவமனை ஆய்வு தெரிவித்துஉள்ளது. 15 சதவீத நோயாளிகள் மூட்டுவலியாலும், 45 சதவீதம் பேர் தசை வலியாலும் பாதிக்கப்படுகின்றனர். மூட்டுவலி என்பது தற்காலிகமாகவோ அல்லது நீண்டகாலத்துக்கோ இருக்கலாம்.


மூட்டுவலி பாதிப்பு



கொரோனா பாதித்து குணமடைந்த பின் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி போன்றவை பொதுவான பிரச்னைகளாக உள்ளன என டில்லி தனியார் மருத்துவமனை ஆய்வு தெரிவித்துஉள்ளது. 15 சதவீத நோயாளிகள் மூட்டுவலியாலும், 45 சதவீதம் பேர் தசை வலியாலும் பாதிக்கப்படுகின்றனர். மூட்டுவலி என்பது தற்காலிகமாகவோ அல்லது நீண்டகாலத்துக்கோ இருக்கலாம். குணமடைந்தவர்கள் உடனே பழைய நிலைக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர். உடற்பயிற்சி, வேலையில் படிப்படியாக ஈடுபட வேண்டும்.

தகவல் சுரங்கம்


நிலவில் கால் தடம்



மனிதன் முதலில் நிலவில் காலடி வைத்த தினம் இன்று. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா சார்பில் 1969 ஜூலை 16ல், 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20 (இந்திய நேரம் நள்ளிரவு 12:48 மணிக்கு) நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். அமெரிக்க தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X