இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவோம்: நேபாள பிரதமர் துபா உறுதி

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காத்மாண்டு :இந்தியா - நேபாளம் இடையிலான உறவை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நேபாளத்தின் புதிய பிரதமர் ஷேர் பகதுார் துபா தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் ஏற்பட்டது. பார்லி., யை கலைத்து அதிபர் பித்யா தேவி
இந்திய உறவு, வலுப்படுத்துவோம், நேபாள பிரதமர், துபா, உறுதி

காத்மாண்டு :இந்தியா - நேபாளம் இடையிலான உறவை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நேபாளத்தின் புதிய பிரதமர் ஷேர் பகதுார் துபா தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் ஏற்பட்டது. பார்லி., யை கலைத்து அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். நவ., 12, 19ல் தேர்தலை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


இதற்கிடையே முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்., வழக்கு தொடர்ந்தது.
அதில் பார்லி., மீண்டும் செயல்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் நேபாள காங்., தலைவர் ஷேர் பகதுார் துபா பிரதமராக சமீபத்தில் பதவியேற்றார்.


latest tamil news



பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளம் வாயிலாக ஷேர் பகதுார் துபா வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதற்கு நன்றி தெரிவித்து நேபாள பிரதமர் துபா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்திக்கு நன்றி. இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த, மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-202122:47:31 IST Report Abuse
அப்புசாமி செலவுக்கு கொஞ்சம் துட்டு தேவைப்படுது போலிருக்கு. ஸ்ரீலங்காவும் இப்பிடித்தான். நாம வழக்கம் போல வசுதைவ குடும்பகம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஜூலை-202120:59:44 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் முன்பு, சீனாவுடன் உள்ள உறவை முறித்துக்கொண்டால் நல்லது.
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
19-ஜூலை-202120:53:42 IST Report Abuse
VELAN S இந்த ஆளு ஷேர் பகதுார் துபா மோடியை பாராட்டும் போது சைனாக்காரனை மறந்து விட்டார் போலிருக்கு , மறுபடி ஞாபகம் வந்த வுடன் சைனாக்காரன் பின்னாடி பூய் நிற்பார் , தெரியாதா எங்களுக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X