சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பஞ்சாயத்து தீருமா?

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
பஞ்சாயத்து தீருமா?'பஞ்சாப் பஞ்சாயத்தை தீர்க்க அனுப்பினால், இவர், தன் பஞ்சாயத்தை முன்னிலைப்படுத்தி புலம்புகிறாரே...' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத்தைப் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.ராவத், உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர். தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் என்ற முக்கியமான பதவியில் உள்ளார்.

அக்கம் பக்கம்


பஞ்சாயத்து தீருமா?



'பஞ்சாப் பஞ்சாயத்தை தீர்க்க அனுப்பினால், இவர், தன் பஞ்சாயத்தை முன்னிலைப்படுத்தி புலம்புகிறாரே...' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத்தைப் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.ராவத், உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர். தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் என்ற முக்கியமான பதவியில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்களை தீர்க்க, குலாம்நபி ஆசாத்தை அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்தது. தற்போது ஹரீஷ் ராவத், அந்த பொறுப்பை கவனிக்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரசில், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையே நடக்கும் குடுமிபிடிச் சண்டையை தீர்க்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
சித்துவை பஞ்சாப் மாநில காங்., தலைவராக கட்சி மேலிடம் நியமித்தாலும், அமரீந்தர் ஆதரவாளர்கள் அதை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் கடுப்பான ராவத், தன் சொந்த மாநிலமான உத்தரகண்டில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். உத்தரகண்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிப்பதற்கு ஆதரவு அளிக்கும்படி, கட்சி நிர்வாகிகளை அணி திரட்டி வருகிறார்.
இதைக் கேள்விப்பட்ட காங்., தொண்டர்கள், 'ஊருக்கே பஞ்சாயத்து செய்யும் ராவத்துக்கு, அவரது பஞ்சாயத்தை தீர்க்க ஆள் கிடைக்காமல் போய் விட்டதே...' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X