டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (2)
Share
தி.மு.க. அமைப்பு செயலர் பாரதி: 'தி.மு.க. சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம்' என முதன் முதலில், உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதை, தி.மு.க.வினர் அறிவர். எனினும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை, தி.மு.க., ஒரு போதும் அனுமதிக்காது.'டவுட்' தனபாலு: நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

'டவுட்' தனபாலு

தி.மு.க. அமைப்பு செயலர் பாரதி: 'தி.மு.க. சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம்' என முதன் முதலில், உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதை, தி.மு.க.வினர் அறிவர். எனினும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை, தி.மு.க., ஒரு போதும் அனுமதிக்காது.

'டவுட்' தனபாலு: நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பெருகி வரும் பேனர் கலாசாரத்தால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு அரசு ஆளாகக் கூடும் என்பதால், இப்படியொரு, 'மிரட்டல்' அறிக்கையை விடுகிறீர்களோ என்ற, 'டவுட்' உங்கள் கட்சியினருக்கு வந்திருக்கும்!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:
இந்த ஆண்டு இறுதிக்குள், 96 கோடி கொரோனா தொற்று தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என, மத்திய அரசு எடுத்த முடிவு பாராட்டிற்குரியது. ஏற்கனவே, தமிழகத்திற்கு குறைவாக பெற்ற, 51 லட்சத்து, 58 ஆயிரத்து, 335 தடுப்பூசிகள் என, மொத்தம் 6 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 935 தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்.

'டவுட்' தனபாலு: பத்தாண்டுகளாக சுறுசுறுப்பாக இயங்கிய நீங்கள், கடந்த இரண்டு மாதங்களாக நல்ல ஓய்வில் இருக்கிறீர்கள் என்பது, ஏராளமான எண்கள், புள்ளிவிபரங்கள் நிரம்பிய உங்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஓய்வு இன்னும் அதிகமாகும் போது, அறிக்கையின் ஆழத்தை இன்னும் அதிகரிப்பீர்களோ என்ற, 'டவுட்' தி.மு.க., ஊடகப் பிரிவினருக்கு வந்துள்ளது. ஏனெனில், தக்கபடி அவர்கள் தானே பதிலளிக்க வேண்டும்!


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் சார்ந்த பல்கலைகளுக்கு அத்துறைகளை சேர்ந்த பேராசிரியர்களை நியமிக்காமல் பொறியியல் வேளாண்மை உள்ளிட்ட சிறப்பு படிப்புகளை பயின்ற பேராசிரியர்கள், துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை.

'டவுட்' தனபாலு: டாக்டர் சார்... துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவோர் எந்த ஜாதியை சேர்ந்தவர்; நமக்கு சாதகமாக இருப்பாரா என்பதைத் தான் மந்திரிகள் யோசிப்பர். அவர்கள் என்ன பாடம் படித்துள்ளனர் என்றெல்லாமா பார்த்து நியமிப்பர்... அப்படி எல்லாம் நியமித்தால், நல்ல தரமான துணைவேந்தர்கள் பல்கலைகளுக்கு கிடைத்து விடுவரே... அவ்வாறு கிடைக்கக் கூடாது என்பதால் தான், படிப்பை எல்லாம் பார்ப்பதில்லையோ என்ற, 'டவுட்' உள்ளது!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X