சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நிர்வாகத்தை கவனியுங்கள் ஸ்டாலின்!

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நிர்வாகத்தை கவனியுங்கள் ஸ்டாலின்!ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த 1952 முதல், 2020 வரை 68 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தோர் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ்., ஆகியோர்.இவர்கள் அனைவரும், 'மத்திய அரசு' என்று தான் கூறினர். அதே மத்திய அரசில், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.,வை


நிர்வாகத்தை கவனியுங்கள் ஸ்டாலின்!ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த 1952 முதல், 2020 வரை 68 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தோர் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ்., ஆகியோர்.இவர்கள் அனைவரும், 'மத்திய அரசு' என்று தான் கூறினர். அதே மத்திய அரசில், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.,வை சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களும், மத்திய அரசு என்று தான் கூறினர். முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் அவ்வாறு தான் கூறினார்.கருணாநிதி நினைத்திருந்தால், தான் முதல்வராக இருந்தபோது தமிழ் புத்தாண்டை சித்திரை ஒன்றாம் தேதியில் இருந்து, தை முதல் தேதிக்கு மாற்றியது போல், இதையும் 'ஒன்றிய அரசு' என மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.தமிழறிவும், தி.மு.க., கொள்கையும் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரை விட, முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது போலும்!சமீபத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உடனே ஸ்டாலின், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறுகிறார்.பாடநுால் கழகத்தின் தலைவர் லியோனி, 'பாட புத்தகத்திலும் ஒன்றிய அரசு என பதிப்பிக்கப்படும்' என்கிறார்.பத்து ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. ஏராளமான வாக்குறுதிகளை தந்து தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியை, முதல்வர் ஸ்டாலின் அரசு தேட வேண்டும். அதை விடுத்து, 'ஒன்றிய அரசு' என அதையும், இதையும் கூறி காலத்தை வீணாக்காதீர்.
ஒன்றிய அரசு எனும் சொல்லால், தமிழக மக்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்பட போவது இல்லை. அதனால் நிர்வாகத்தை கவனியுங்களேன், முதல்வர் ஸ்டாலின் அவர்களே!


பிழைப்பை பாருங்கள் ரஜினி ரசிகர்களே!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. எனவே நான் உருவாக்கிய மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் ரஜினி ரசிகர் மன்றமாக செயல்படும்' என சொல்லி விட்டார், நடிகர் ரஜினி.
அப்பாடா... ஒரு முடிவுக்கு வந்து விட்டார் ரஜினி. இனிமேல் அவர் நடிக்கும் படங்களில், 'பஞ்ச் டயலாக்' எல்லாம் இடம் பெறாது என நம்பலாம்.'என் வழி தனி வழி; நான் வந்துட்டேன்னு சொல்லு; நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துக்கு 'கரெக்டா' வருவேன்...' இப்படி ரஜினி இனி பஞ்ச் டயலாக் பேசினால் மக்கள் விசில் அடித்து வரவேற்க மாட்டார்கள்.
'அட போய்யா... சும்மா கடுப்பேத்தாதே' என எரிச்சல் தான் அடைவர்.சேர்த்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்ற கவலை மட்டுமே ரஜினிக்கு உள்ளது. நாட்டின், 'சிஸ்டம்' கெட்டு போச்சு என்பதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.'நாடு எக்கேடு கெட்டால் என்ன... நம் சொத்துக்கு ஏதும் பாதிப்பு வராமல் இருந்தால் சரி' என்பது தான் ரஜினியின் எண்ணம்.சிவாஜிகணேசன், ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கமல் போன்ற நடிகர்கள் அரசியலில் குதித்து பரிதாப நிலையை எட்டியது போல, தனக்கும் அப்படி நேர்ந்து விடுமோ என்று பயந்து போய் ரஜினி, 'எஸ்கேப்' ஆகியிருப்பார்.
'விட்டதடா ஆசை, விளாம்பழத்தின் ஓட்டோடு' என்ற ஞானம், ரஜினிக்கு உதித்திருக்கலாம்.இனிமேல் ரஜினி ரசிகர்கள் எந்த குழப்பமும் இல்லாமல், தங்களது பிழைப்பை பார்ப்பர் என தாராளமாக நம்பலாம்.


ரேஷனில் உளுந்து கிடைக்குமா?எஸ்.லியாகத் அலி, கோட்டகுப்பம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை சமையலுக்கு அத்தியாவசிமானவை என்றுணர்ந்த கருணாநிதி, அவரது ஆட்சிக் காலத்தில் மூன்றையும் ரேஷனில் வழங்க உத்தரவிட்டார்.ஆனால், 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்குவதை ரத்து செய்துவிட்டார். மற்ற இரு பொருட்களையும் கூட ரத்து செய்திருப்பார். ஆனால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததால் அதை அவர் செய்யவில்லை.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன், கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டார். பராமரிப்பின்றி உழவர் சந்தை, அண்ணா நுாற்றாண்டு நுாலகம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன.
தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் உழவர் சந்தை, அண்ணா நுாற்றாண்டு நுாலகம் போன்ற கருணாநிதியின் கனவு திட்டங்களை சீர் செய்ய துவங்கியுள்ளார்.அதேபோல், ரேஷன் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்க வேண்டும்.


இப்படியே தொடர்வது நல்லதல்ல!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், 'மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் ஆலோசனையை கேட்காமல், கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் தர மாட்டோம்' எனக் கூறியுள்ளார்.மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத், 'மேகதாது சிக்கலை, இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி தீர்க்க வேண்டும். கர்நாடகத்தின் நீர்ப்பாசன திட்டங்களை ஆய்வு செய்து, அம்மாநிலத்திற்கு மத்திய அரசு நீதி வழங்கும்' எனக் கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், 'காவிரி என்பது அரசியல் பிரச்னை அல்ல; நம் வாழ்வுரிமை' என தெரிவித்துள்ள நிலையில், 'அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பகிரங்கமாக
அறிவித்துள்ளது, வரம்பு மீறிய செயல்.காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் பேசி கொள்வது தேசிய ஒற்றுமைக்கு அழகல்ல.இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு, நதிகளை தேசிய மயமாக்குவது தான் ஒரே தீர்வு.மத்திய அரசு, நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து காலம் தாழ்த்துவதும், வேடிக்கை பார்ப்பதும் நல்லதல்ல.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, தேர்தல் குறித்து சிந்திக்காமல், தேச ஒற்றுமையை எண்ணி செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
20-ஜூலை-202111:11:32 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan முதலமைச்சர் பூங்காக்கு பதிலாக ஏரி அமைத்தல் நல்ல முடிவு
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202106:23:26 IST Report Abuse
D.Ambujavalli அரசியல் வேண்டாம், பல நூறு கோடிகள் சம்பாதித்து நல்ல குடும்பத் தலைவனாக இருக்கிறேன் ரசிகர்கள் நீங்கள் மட்டும், மன்றத்தின் மூலம், என் படங்களை ஒட்டிக்கொடுங்கள் .... இதற்காகத்தான் இருபத்தைந்து வருஷங்களாக ரசிகர்களை முட்டாள்களாக்கி இருந்தாரோ? இனியும் ரசிகன், அது இது என்று சொல்லிக்கொண்டு அவரை ஆதரிக்கும் பைத்தியக்காரத்தனத்தை மறந்து விட்டு உங்கள் குடும்பத்துக்கு கஞ்சி ஊற்ற கிளம்புங்கள் அவர் படங்களை அவரே தூக்கிப் பிடிக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X