பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஜூலை 20, 2020மதுரை மாவட்டத்திலுள்ள செல்லுாரில், 1938ல் பிறந்தவர் கர்ணன். உடன் பிறந்தோர் ஒன்பது பேர். குடும்பம் வறுமையில் தவித்ததால், ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை உதறி தையல் கலைஞராக பணிபுரிந்தார். 'போலியோ'வால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானவர்.புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். கடந்த 1958ல் இவரின் 'நீறு பூத்த நெருப்பு' என்ற முதல் சிறுகதை 'காவேரி'

இதே நாளில் அன்று


ஜூலை 20, 2020



மதுரை மாவட்டத்திலுள்ள செல்லுாரில், 1938ல் பிறந்தவர் கர்ணன். உடன் பிறந்தோர் ஒன்பது பேர். குடும்பம் வறுமையில் தவித்ததால், ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை உதறி தையல் கலைஞராக பணிபுரிந்தார். 'போலியோ'வால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானவர்.புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். கடந்த 1958ல் இவரின் 'நீறு பூத்த நெருப்பு' என்ற முதல் சிறுகதை 'காவேரி' இதழில் வெளியானது. இவரின் எழுத்து திறனை அறிந்து அதை மேம்படுத்தியவர், சி.சு.செல்லப்பா.தையல்காரராக பணிபுரிந்தபடியே கர்ணன் ஏராளமான நுால்கள் எழுதினார். நாவல், சிறுகதை, வரலாறு, கவிதை, குறுநாவல் என, எழுத்தின் அத்தனை துறையிலும் முத்திரை பதித்தார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். 'அவர்கள் எங்கே போனார்கள்' என்ற நுாலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.
கடந்த 2020 ஜூலை 20ம் தேதி தன் 82வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் கர்ணன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X