'கான்வட்' யாத்திரை: வழக்கு முடித்துவைப்பு

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் 'கான்வட்' யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான வழக்கை முடித்து வைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.உத்தர பிரதேசம், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள், உத்தரகண்டின் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்று, புனித கங்கை நீரை கலசங்களில் நிரப்பி, தங்கள் ஊருக்கு எடுத்து வருவர்.பின் அங்குள்ள
கான்வட்  யாத்திரை  வழக்கு முடித்துவைப்பு

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் 'கான்வட்' யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான வழக்கை முடித்து வைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உத்தர பிரதேசம், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள், உத்தரகண்டின் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்று, புனித கங்கை நீரை கலசங்களில் நிரப்பி, தங்கள் ஊருக்கு எடுத்து வருவர்.பின் அங்குள்ள கோவில்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவர். ஆண்டுதோறும் ஜூலையில் நடக்கும் இந்த யாத்திரை, கான்வட் யாத்திரை என அழைக்கப்படுகிறது.


latest tamil news



இந்த ஆண்டு கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக, உத்தரகண்டில் இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசு, யாத்திரைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கான்வட் யாத்திரைக்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, உ.பி., அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டிற்கான கான்வட் யாத்திரையை ரத்து செய்து, உ.பி., அரசு உத்தரவிட்டது.மக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.உ.பி., அரசின் அறிவிப்பை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202101:41:47 IST Report Abuse
அப்புசாமி இவிங்களா முடிக்கலை. அதுவா முடிஞ்சுபோச்சி.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூலை-202123:56:47 IST Report Abuse
தமிழவேல் "மக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது". அப்போ, உ.பி., அரசு மக்களின் பாதுகாப்பை மறந்து அனுமதி அளித்ததோ ?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஜூலை-202121:46:57 IST Report Abuse
A.George Alphonse Lord Shiva ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார்.மக்கள் சுபிட்சமாக வாழவே அவர் விரும்புவார்.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-ஜூலை-202109:08:12 IST Report Abuse
கௌடில்யன்நாளைக்கு கிடா வெட்டி விருந்து வைப்பதையும் கட்டுப்பாட்டுடன் கொண்டாட வற்புறுத்துங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X