சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'ஆன் லைனில்' திருமணம் முடிவு ஆபத்து அதிகம்!

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'மேட்ரிமோனியல்' எனப்படும் திருமண ஏற்பாடு செய்யும் இணையதளங்களில் ஏமாறாமல் இருப்பது எப்படி என கூறுகிறார் சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன்: சென்னையில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர். வயது 28. அப்பா இல்லை என்பதால் குடும்பத்தில் அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுத்து வந்தார். தனக்குள்ள கம்ப்யூட்டர் அறிவை வைத்து கல்யாண வரனை அதற்கான
சொல்கிறார்கள்

'மேட்ரிமோனியல்' எனப்படும் திருமண ஏற்பாடு செய்யும் இணையதளங்களில் ஏமாறாமல் இருப்பது எப்படி என கூறுகிறார் சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன்: சென்னையில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர். வயது 28. அப்பா இல்லை என்பதால் குடும்பத்தில் அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுத்து வந்தார். தனக்குள்ள கம்ப்யூட்டர் அறிவை வைத்து கல்யாண வரனை அதற்கான மேட்ரிமோனியல் இணையதளத்தில் தேடியுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் டாக்டராக பணியாற்றுகிறேன் என்று கூறி ஒருவன் அறிமுகம் ஆகிறான். பங்களா கார் என அவன் அனுப்பிய படங்களைப் பார்த்து அசந்து போன அந்த பெண் கட்டினால் இவனைத் தான் கட்ட வேண்டும் என மனதுக்குள் நினைத்து கனவுலகில் மிதக்கிறார்.வழக்கமாக தினம் நான்கைந்து முறை பேசும் அவன் திடீரென ஒரு சில நாட்கள் பேசவில்லை.இந்த பெண் மீண்டும்மீண்டும் முயற்சித்துப்பார்க்க ஒரு நாள் அவன் லைனில் வந்தான். 'விபத்தில் சிக்கி விட்டேன்; மருத்துவமனையில் இருக்கிறேன்' என்றவன் 'முழுவதும் இயங்க முடியாத நிலையில் இருப்பதால் மருத்துவ கட்டணத்திற்கு பணம் தேவை' என 25 லட்சங்களை கேட்டுள்ளான்.அமெரிக்க மாப்பிள்ளை 25 லட்சமெல்லாம் சாதாரணம் என கருதி வீட்டை அடகு வைத்து பணத்தை திரட்டி அவனுக்கு அனுப்பியுள்ளாள். பணம் சென்றடைந்த நிமிடம் முதல் அவன் போனை எடுக்கவே இல்லை.இவளும் தொடர்ந்து முயற்சித்துப் பார்த்து சோர்ந்திருந்த வேளையில் அவனின் உறவினர் என ஒருவர் அவளை சந்தித்தார்.'மருத்துவமனையில் அவன் உயிரிழந்து விட்டான்' என கூறியுள்ளார்.

உலகமே முடிந்து போனது போல உணர்ந்த அந்த பெண்ணுக்கு உறவினர் என வந்தவர் மீது லேசான சந்தேகம் வர போலீசுக்கு வந்து எங்களின் உதவியை நாடினார். நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இதுபோல பல பெண்களிடம் பல கோடிகளை அந்த அமெரிக்க மாப்பிள்ளை ஏமாற்றியுள்ளதும் அவன் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதும் தெரிந்தது.எனவே எல்லாவற்றையும் ஆன்லைனில் முடித்து விடலாம்என நினைக்கக்கூடாது.

நேரில் சந்தித்து விசாரித்து தெளிவடைந்த பிறகே திருமணத்திற்கும்பிற சந்திப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும். சந்தேகம் இருப்பதாக அறிந்தால் அந்த நபர் குறித்து விசாரிக்க போலீஸ் உதவியையும் நாடலாம்.பெண்கள் குழந்தைகள் நலனுக்காக துணை ஆணையர் அந்தஸ்தில் பெண் அதிகாரியுடன் ஒரு விசேஷ பிரிவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களும் உஷாரானபெண்களும் அந்த பிரிவை அணுகி ஏமாந்த விபரம் அல்லது மணக்க இருக்கும் மாப்பிள்ளை குறித்து அறிந்த பின் தலையை நீட்டலாம்!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-ஜூலை-202116:52:46 IST Report Abuse
கல்யாணராமன் சு. வேலை பார்க்கும் (என்று நினைக்கிறேன்), 28 வயதாகும்,கணினி பயன்படுத்த தெரியும் இந்த பெண்ணுக்கு அறிவு மிகவும் கம்மி என்று தோன்றுகிறது.. "அமெரிக்க ராணுவத்தில் டாக்டராக பணியாற்றுகிறேன்" என்று கூறும் பையனுக்கு அமெரிக்க அரசாங்கமே விபத்தின் மருத்துவ செலவுகளுக்கு பணம் கொடுக்கும் அல்லது காப்பீட்டுத்திட்டத்தில் சேர்த்திருக்கும்.. இந்த வசதி அந்த பையன் எங்கிருந்தாலும் செல்லுபடியாகும்.. அவன் கேட்ட பணத்தை எப்படி அனுப்பினார்கள்? ரூபாய் என்றால், இந்தியாவில் எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளானோ, அங்கே சென்று கட்டியிருக்கவேண்டும், பையன் இந்தியாவில் இல்லையென்றால், இந்த பணத்தை எப்படி அனுப்பியிருப்பார்கள் ? ... இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் கார், வீட்டின் படங்களை பார்த்து 25 லட்சம் கொடுப்பதென்பது, அறிவிலித்தனத்தின் உச்ச கட்டம் ........
Rate this:
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
20-ஜூலை-202113:30:42 IST Report Abuse
navasathishkumar இந்த பெண் ஒன்றும் அறிவாளி இல்லை, ஏன் என்றால் கம்பியூட்டரில் தேடினால் அவன் ஜாதகமே வரும் ...அதுவும் எந்த மெட்ரி மோனியால் இலவச சேவை தருகின்றது? ..அந்த அமெரிக்கா மாப்பிள்ளையும் பணம் கொடுத்து விலாசம் , ராசி , இல்லை பணியிடம் குறித்த விவரங்கள் கொடுத்தே இருப்பான் ..இந்த பெண் அவனை தேர்வு செய்து போனில் கடலை போடும் போதே விசாரித்திற்கலாம் ..தமிழக போலீஸ் தான் கிடைச்சங்கலாமா உன் கதையை கேட்க? பென்டகனில் வடை சுட்டாலும் டிடெய்ல்ஸ் இல்லாம காதலிக்க இது என்ன மெரினா வா ? வெப்சைட் , இன்ஸ்ட்டா எல்லாம் முட்டாளாக்க மட்டுமே ...நேரில் பார்க்கும் போதே பல் சொத்தை தெரியாது .. அப்புறம் கட்டிக்கிட்டு கதறுனா எப்படி ? இனிமே ஆளை பார்த்து மயங்காதீங்க ...பவுடர் இல்லாத முகம் தான் ரியல் ... அதை செய்யுமா முதலில் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202108:30:00 IST Report Abuse
Sampath Kumar திருமணம் என்றாலே ஆபத்து தான் சார் இதில் ஒன லைன் வேற இனி வரும் காலம் திருமணமே இருக்காது அதன் புனிதமே போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X