முக்கிய பிரமுகர்களின் போன் ஒட்டு கேட்கப்படவில்லை

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி :மத்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர்கள் நீதிபதி சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.''மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்குடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது'' என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்
 முக்கிய பிரமுகர்கள், போன் ஒட்டு கேட்பு, மறுப்பு!

புதுடில்லி :மத்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர்கள் நீதிபதி சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.

''மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்குடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது'' என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குழுமம் உருவாக்கியுள்ள 'பெகாசஸ்' என்ற உளவு தொழில்நுட்ப மென்பொருள் வாயிலாக மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை உளவு பார்க்க முடியும்.ஆய்வுஒரு நாட்டின் அரசு அல்லது அரசு குறிப்பிடும்அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருள் விற்கப்படுகிறது. உலகெங்கும் 36 நாடுகளுக்கு இந்த மென்பொருள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அந்த மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல் போன் தகவல் பிரான்சில் செயல்படும் 'போர்பிடன் ஸ்டோரிஸ்' என்ற ஊடக அமைப்புக்கும் 'அம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற மனித உரிமைக்கான தொண்டு நிறுவனத்துக்கும் கிடைத்துள்ளது.இந்த தகவல்களை உலகெங்கும் உள்ள 16 ஊடகங்கள் ஆய்வு செய்து அதன் அறிக்கை நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.இந்தியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'த வயர்' என்ற ஆங்கில இணைய செய்தி நிறுவனமும் இந்த
ஆய்வில் பங்கேற்றுள்ளது.இந்த ஆய்வில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டது தெரிய வந்துள்ளது.


அறிக்கை தாக்கல்


இரண்டு மத்திய அமைச்சர்கள் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு நீதிபதி தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்களும் இதில் அடங்குவர்.
இந்த தகவல்களை மத்திய அரசு ஏற்கனவே மறுத்துள்ளது. இந்நிலையில் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. மொபைல் போன் ஒட்டு கேட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. அதற்கு முதல் நாள் மொபைல் போன் உளவு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை.
பார்லி.யின் செயல்பாடுகள் மற்றும் நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்கு முன்பும் இது போன்ற செய்திகள் வெளியாகின. பலரது 'வாட்ஸ் ஆப்' செயலி உளவு பார்க்கப்படுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால் அதை பல்வேறு தரப்பினர் மறுத்துள்ளனர். அந்த செய்தி உண்மையில்லை என்பது தெரிய வந்தது.


உண்மையில்லைநம் நாட்டில் தகவல் தொடர்பு கட்டமைப்புக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு எந்த வகையிலும் யாரையும் உளவு பார்க்கவில்லை. சட்டவிரோதமாக மற்றவர் உளவு பார்ப்பதற்கும் வாய்ப்பு இல்லை.பார்லி. கூட்டத் தொடர்துவங்கியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிறிதும் உண்மையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


பட்டியலில் யார் யார்?நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017ல் இருந்து 2019க்குள் இந்த உளவு பார்க்கும் நடவடிக்கை நடந்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்தப் பட்டியலில் காங். முன்னாள் தலைவர்ராகுல் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்கிஷோர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்று உள்ளன. தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள பிரஹலாத் படேல் அஸ்வினி வைஷ்ணவ் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சராக உள்ள அஸ்வினி வைஷ்ணவின் மொபைல் போன் 2017ல் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் எம்.பி.யாக கூட இல்லை.

தேர்தல் கமிஷனராக இருந்த அசோக் லாவாசாவின் பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது புகார்கள் கூறப்பட்டன. அது தொடர்பாக தேர்தல் கமிஷன் நடத்திய விசாரணையில் இவர்களுக்கு எதிராக லாவாசா கருத்து தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியும் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல ஆங்கில நாளிதழ்களின் மூத்த
பத்திரிகையாளர்களும் உளவு பார்க்கப்பட்டு உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை நடத்த வலியுறுத்தல்

இந்தியர்களின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்துக்கு காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இரண்டு நாட்களுக்கு முன் 'நீங்கள் இப்போது எதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்' என சமூக வலைதளத்தில் காங். முன்னாள் தலைவர் ராகுல் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் வெளியிட்ட பதிவில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் 'உங்களுடைய மொபைல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

காங். மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளதாவது:யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. அது உண்மையாக இருந்தால் இது மிகப் பெரிய பிரச்னை. நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. சீனா பாக். போன்ற நாடுகள் நம் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்களை உளவு பார்க்கின்றனவா.இது தொடர்பாக நீதி விசாரணை அல்லது பார்லி. கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங். பொதுச் செயலர் பிரியங்கா தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளனர்.ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ''இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று அமித் ஷா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த பா.ஜ. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் ''இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பார்லி. நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை காங். கட்சியினர் கூறுகின்றனர்'' என்றார்.


காலவரிசையை பாருங்க!பல்வேறு விஷயங்களில் சம்பவங்கள் நடந்த காலவரிசையை பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்த விவகாரத்திலும் அதையே நான் கூறுகிறேன். பார்லி. கூட்டத் தொடர் கூடும் நிலையில் உளவு பார்த்ததாக கூறப்படும் செய்தி வெளியாகியுள்ளது. பார்லி.யை முடக்குவதற்கான முயற்சி தான் இது.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர் பா.ஜ.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூலை-202118:27:08 IST Report Abuse
Pugazh V ஆஹா...அப்டியே ஒட்டுக் கேட்டுட்டாலும்ம்ம்....அத வெச்சு என்ன பண்ணுவாங்க? பாஜகவினரால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று ஏழு ஆண்டுகளாகப் பார்க்கிறோமே. பெட்ரோல் டீசல் சமையல் வாயு விற்பனை களில் மாநில அரசு களுக்கு அதிக வருமானம் வருகிறது என்று அழுகிற பாஜகவினால் அதைக்கூட இதுவரை திருத்தி அமைக்க கையாலாகவிவ்லை. இதுகள் ஒட்டுக்கேட்டு என்ன பண்ண முடியும்???
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூலை-202117:08:06 IST Report Abuse
sankaseshan ஒட்டு கேட்டாலும் தவறில்லை காங்கிரஸ்கரன் வண்டவாளம் தண்ட வா லத்துக்கு வரும் .
Rate this:
Cancel
Namasivayam Ganesan - MADURAI,இந்தியா
20-ஜூலை-202114:03:40 IST Report Abuse
Namasivayam Ganesan ஒட்டு கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இது ஒரு 2G, Bofors, Hegde Telephone tapping மாதிரி, Modi Government க்கு சோதனை விவகாரம். Perceptions make spoilsport.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X