புதிதாக பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேருக்கு 'டெல்டா'

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'தற்போது புதிதாக ஏற்படும் தொற்று பாதிப்புகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் உருமாறிய, 'டெல்டா' வகை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று மேலும் உருமாற்றம் அடைந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனைஉருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய சார்ஸ்கோவிட் - 2 மரபியல் அமைப்பை
புதிதாக பாதிப்பு, 80 சதவீதம் பேர், 'டெல்டா'

புதுடில்லி :'தற்போது புதிதாக ஏற்படும் தொற்று பாதிப்புகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் உருமாறிய, 'டெல்டா' வகை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று மேலும் உருமாற்றம் அடைந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பரிசோதனை



உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய சார்ஸ்கோவிட் - 2 மரபியல் அமைப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்தியது.
இந்த அமைப்பின் கீழ் 28 பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் துணை தலைவர் டாக்டர் என்.கே.அரோரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசில் உருமாறிய புதிய வகையான பி.1.617.2 என்ற வைரஸ் கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் கண்டறியப்பட்டது. இதுவே 'டெல்டா' வகை தொற்று என அழைக்கப்படுகிறது.இந்த வகை தொற்று மனித உடல்களில் மிக வேகமாக பெருகும் தன்மை உடையது. எனவே தான் நுரையீரல் பாதிப்புகள் கடுமையாக உள்ளன.


40 - 60 சதவீதம்



முதல் அலையில் பரவிய, 'ஆல்பா' வகை தொற்றை விட இந்த டெல்டா வகை, 40 - 60 சதவீதம் தீவிர தன்மையுடன் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 80 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.'டெல்டா பிளஸ்' வகையைச் சேர்ந்த தொற்று தமிழகம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு 55 - 60 பேர் வரை இந்த தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.இந்த டெல்டா பிளஸ் தொற்றில் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஐ.சி.எம்.ஆர்., நடத்திய ஆய்வுகளின்படி தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது நிரூபணமாகி உள்ளது.தற்போது பதிவாகும் புதிய பாதிப்புகளில் 80 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றின் தாக்குதலே உள்ளது. தொற்று மேலும் உருமாற்றம் அடைந்தால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும்.


தடுப்பு நெறிமுறை



இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வதாலும், தொற்று தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதாலும் மட்டுமே அடுத்தடுத்த அலைகளை கட்டுப்படுத்தவோ, தள்ளிப்போடவோ முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


24 நாட்களில் 40 கோடி தடுப்பூசி!



மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியபோது, 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட 85 நாட்களானது. கடந்த மாதம் முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து 24 நாட்களில், 30 - 40 கோடி பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
நேற்றைய நிலவரப்படி நாடு முழுதும் 40 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 493 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202110:35:06 IST Report Abuse
Kasimani Baskaran அடிப்படை பாதுகாப்பில் (சமூக இடைவெளி, தரமான சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையை வேறு இடத்தில வைத்தால் கிருமி நாசினி வைத்து துடைப்பது) கவனம் செலுத்தினால் பரவுவதை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X