பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்வு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
துடில்லி :கடந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் ஆகியவை மீதான உற்பத்தி வரி வாயிலாக, மத்திய அரசுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லோக்சபாவில் நேற்று பெட்ரோலிய துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியதாவது:கடந்த 2017 ஜூன் 16 முதல், கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய செலாவணி மதிப்பின் அடிப்படையில் அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.3.35 லட்சம் கோடி உயர்வு

துடில்லி :கடந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் ஆகியவை மீதான உற்பத்தி வரி வாயிலாக, மத்திய அரசுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

லோக்சபாவில் நேற்று பெட்ரோலிய துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியதாவது:கடந்த 2017 ஜூன் 16 முதல், கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய செலாவணி மதிப்பின் அடிப்படையில் அன்றாடம் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான உற்பத்தி வரி லிட்டருக்கு முறையே, 19.98 ரூபாய் மற்றும் 32.90 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் 2020 - 21ம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி வருவாய் 88 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் பெட்ரோல் விலை 76 முறை உயர்த்தப்பட்டு, 10 முறை குறைக்கப்பட்டது. அதுபோல் டீசல் விலை 73 முறை உயர்த்தப்பட்டு, 24 முறை குறைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் பெட்ரோல் விலை 39 முறை உயர்த்தப்பட்டு, ஒரு முறை குறைக்கப்பட்டது. டீசல் விலை 36 முறை உயர்த்தப்பட்டு, இரு முறை குறைக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
20-ஜூலை-202119:18:26 IST Report Abuse
P.K.SELVARAJ இதை எல்லாம் காங்கிரஸ் அரசு செய்திருந்தால் தான் தப்பு. பிஜேபி செய்தால் தப்பே இல்லை. இடிப்பார் இல்லா எமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-ஜூலை-202115:00:00 IST Report Abuse
ஆரூர் ரங் சென்றாண்டு முதல் சுகாதாரத்துக்கான அரசின் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு சலுகைகள் தரும் நெருக்கடி வேறு. அதே ஊரடங்கால் ஜி எஸ் டி வசூல் குறைந்துவிட்டது. ஒரு புறம் வருவாய் குறைவு .மறுபுறம் செலவினங்கள் அதிகரிப்பு. கச்சாஎண்ணெய் விலை உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது இந்நிலையில் குறைந்த விலைக்கு பெட்ரோல் என்பது நடவாத காரியம். வேறு வழியின்றி இவற்றுக்கு வரிக்குறைப்பு செய்ய இயலவில்லை. மத்திய வரி வருவாயிலும் நாற்பது விழுக்காடு மாநிலங்களுக்கு பட்ஜெட் மானியமாக செல்கிறது.மேலும் மாநிலங்களுக்கும் பெட்ரோல் விலை உயர்வு மூலம் கூடுதல் வரி நேரடியாகக் கிடைக்கிறது .மாற்று வருமான வழி கூறாமல் அரசுகளைக் குறைகூறுவது சரியல்ல.
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
20-ஜூலை-202114:20:10 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் திமுக ஆட்சி அமைத்ததும் நாலு ருபாய் குறைக்கப்படும் என மக்களை ஏமாற்றியது. திமுகவுக்கு, நடுவண் அரசை கேள்வி கேக்க எந்த யோக்கியதையும் இல்லை. பாஜக அரசு, இந்த விஷயத்தில் கண்மூடித்தனமாக இருக்கிறது. கேள்வி கேட்கவேண்டிய எதிர் கட்சிகள் திராணி அற்று நிற்கிறது. வலுவான எதிர்க்கட்சி - நாட்டு நலனை மதிக்கும் கட்சி வலுப்பெற வேண்டும். பாஜகவை கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போவது நம் துரதிஷ்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X