விசாரணைக்கு எப்போது ஆஜர்? அனில் தேஷ்முக் விளக்கம்

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாக்பூர் : ''என்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப ட்டுள்ள மனு மீது, நீதிமன்றம் உத்தரவிட்ட பின் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவேன்,'' என, மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்.,கை சேர்ந்த அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை
விசாரணை,எப்போது ஆஜர்?  அனில் தேஷ்முக் விளக்கம்

நாக்பூர் : ''என்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப ட்டுள்ள மனு மீது, நீதிமன்றம் உத்தரவிட்ட பின் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவேன்,'' என, மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்.,கை சேர்ந்த அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத்துறையினர் பலமுறை, 'சம்மன்' அனுப்பினர். அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார்.இந்த வழக்கில், தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news




இதையடுத்து 'வீடியோ' ஒன்றை அனில் தேஷ்முக் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: என் குடும்பத்துக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

என் மகன் சலீல் தேஷ்முக்குக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது; அதில் உண்மையில்லை. அந்த நிலத்தை என் மகன் 2006ம் ஆண்டில் 2.67 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதுவும், அவரது நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது.

என் மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அமலாக்கத்துறையினர் முன் விசாரணைக்கு ஆஜராவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-ஜூலை-202108:25:51 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இப்படியே அடுத்த 10வருடங்களுக்கு மேல் ஓடிவிடும். அவ்வளவுதான். நாம் என்று இருக்கும் உளுத்து போன சட்டங்களை மாற்றுக்கிறோமோ அன்றுதான் விமோச்சனம்
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-ஜூலை-202106:29:15 IST Report Abuse
கௌடில்யன் போலீஸ் அதிகாரியோட வில்லங்கம் பண்ணினதுக்கு நல்லாவே அனுபவிக்கிறார் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X