பொது செய்தி

தமிழ்நாடு

லண்டன், இலங்கை உறவினர்களிடம் காணொலி காட்சி மூலம் நளினி, முருகன் பேசினர்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் சிறையில் இருந்து, லண்டன், இலங்கையில் உள்ள உறவினர்களிடம் காணொலி காட்சியில் முருகன், நளினி பேசினர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜி, இலங்கையில் உள்ள தாய்

வேலுார்:வேலுார் சிறையில் இருந்து, லண்டன், இலங்கையில் உள்ள உறவினர்களிடம் காணொலி காட்சியில் முருகன், நளினி பேசினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜி, இலங்கையில் உள்ள தாய் சோமணியம்மாள் ஆகியோருடன் முருகனும், நளினியும் மொபைல் வீடியோவில் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவர்களுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் முருகன், நளினி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலிருந்து, காணொலி காட்சி மூலம் (வீடியோ கான்ப்பரசிங் முறையில்) லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜியிடம் பேசினர்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக இலங்கையில் உள்ள முருகனின் தாயுடன் பேசவில்லை. இதனால் நேற்று மதியம் 2:00 மணிக்கு மீண்டும் காணொலி காட்சி மூலம் சோமணியம்மாளுடன் முருகனும், நளினியும் பேசினர். அப்போது சிறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X